Tuesday, July 23, 2019

IQ TABLETS.

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒரு ஆச்சாரமான தென்னிந்தியரும் ஒரு வெள்ளைக்கார துரையும் சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.
.
சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு எட்டு மணிக்குக் கிளம்பிய ரயில் மறுநாள் காலை ஏழு மணிக்கு விஜயவாடாவை அடைந்தது.
.
வெள்ளைக்கார துரை ஏற்பாட்டின் படி அவருக்கு மிகவும் பிரமாதமான அருஞ்சுவையுடன் கூடிய அனைத்துக் காலை சிற்றுண்டிகளும் பணியாள் ஒருவரால் வழங்கப்பட்டன.
.
தென்னிந்தியர் தனது நாலு அடுக்கு டிபன் கேரியரின் முதல் அறைலிருந்து இரண்டே இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்து சாப்பிட்டார்.
.
அதே போல ’வால்டேர்’ என்று அன்று அழைக்கப்பட்ட தற்போதைய விசாகப்பட்டிணத்தில் வெள்ளைக்கார துரைக்கு ரெயில்வே சிற்றுண்டி சாலையால், மிகப்பெரிய அளவில் மிகச் சிறப்பான மதிய சாப்பாடு விருந்தாகவே அளித்து மகிழ்விக்கப்பட்டது.
.
இப்போதும் நம் தென்னிந்தியர் தனது டிபன் கேரியரின் இரண்டாவது அடுக்கிலிருந்து நான்கு இட்லிகளை மட்டுமே எடுத்து சாப்பிட்டார்
.
இந்த மனிதரைப் பார்த்து அந்த வெள்ளைக்காரர் மிகவும் வியந்து போனார். அவருக்கு இவரின் செயல் ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தும் ஏனோ ஒரு தயக்கத்தில், தொண்டை வரை வந்த சொற்களை வாயிலிருந்து வெளியே விடாமல், நாகரீகம் என்ற பெயரில் அமைதியாகவே இருந்து விட்டார்.
.
இதே செயல் இரவு எட்டு மணிக்கு ’பெர்ஹாம்பூர்’ என்ற ஸ்டேஷன் வந்ததும், மீண்டும் இரவு டின்னர் நேரத்திலும் நடந்ததால், வெள்ளைக்காரரால் பொறுமையாக இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
.
“ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வேளா வேளைக்க்ச் சாப்பிட்டு வரும் அந்த வெள்ளைப் பண்டம் என்ன?” என்றார்.
.
“ஐயா, இதன் பெயர் " IQ Tablets [ ஐக்யூ டேப்லெட்ஸ்]”;
.
தென்னிந்தியர்களாகிய எங்களால் இதை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு, பேரெழுச்சியுடன் ஒருசில நாட்கள் கழித்து விட முடியும்” என்றார் நம்மாளு.
.
“ஆஹா! அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! இதை எப்படித் தயார் செய்கிறீர்கள் என்பதை எனக்குத் தாங்கள் சற்றே விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டார் அந்த வெள்ளைக்காரர்.
.
தென்னிந்தியரும், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள், அவைகள் தயாரிக்கும் முறைகள் முதலியவற்றை மிகவும் சிரத்தையுடன் அழகாக அற்புதமாக விபரமாக விளக்கிக் கூறினார்.
.
இதைக்கேட்டு மகிழ்வடைந்த வெள்ளைக்காரர், “எனக்கு அதில் இரண்டைத்தர முடியுமா? தாங்கள் எனக்கு இலவசமாகத் தர வேண்டாம். அதற்கு எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அதை நான் தங்களுக்குத் தந்து விடுகிறேன்” என்றார்.
.
ஒரு நிமிடம் தயங்கி யோசித்த தென்னிந்தியர் பிறகு பேசலானார்:
.
“ஐயா, என்னிடம் மீதியுள்ளது மூன்றே மூன்று மட்டுமே; அதை நான் நாளை காலையில் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்;
.
இருப்பினும் நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், அருகில் உள்ள என் சொந்தக்காரர் வீட்டுக்குப் போக இருப்பதால், அங்கு காலை சிற்றுண்டி எனக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்;
.
நீங்கள் என்னிடம் ஆசைப்பட்டுக் கேட்பதால் உங்களுக்கு அவற்றைத் தருவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு IQ Tablet [ஐக்யூ டேப்லெட்ஸ்] ரூபாய் 20 ஆகுமே” என்றார்.
.
[ இந்தச் சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் விலைவாசிகள் மலிவோ மலிவு - ஒரு இட்லி 5 பைசா; ஒரு ரூபாய்க்கு 20 இட்லிகளும், 20 ரூபாய்க்கு 400 இட்லிகளும், 60 ரூபாய்க்கு 1200 இட்லிகளும் கிடைத்த காலம் அது ]
.
இதைக்கேட்டதும் அந்த வெள்ளைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி. தனக்கு இன்று அந்தப்பொருள் கிடைப்பதற்கான தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்து போய், மகிழ்ந்து போய், உடனடியாக 3 டேப்லெட்ஸ்களையும் [இட்லிகளையும்] பெற்றுக்கொண்டு, ரூபாய் 60 பணமும் கொடுத்து விட்டார். டேப்லெட்ஸ்களை [இட்லிகளை] உண்டுவிட்டு தூங்கிப்போனார், வெள்ளைக்காரர்.
.
மறுநாள் காலை ஹெளரா ஸ்டேஷனில் இருவரும் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
.
வெள்ளைக்காரர் கண் விழித்தெழுந்ததும் தென்னிந்தியரைப் பார்த்து, “ஐயா, இந்தப்பொருளைச் செய்வது பற்றிய முழு செய்முறைகளும், ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி விட்டீர்களா! அல்லது ஏதாவது சிலவற்றை சொல்லும் போது நடுவில் விட்டு விட்டீர்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.
.
“சுத்தமாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விபரமாகச் சொன்னேனே, ஐயா” என்றார் தென்னிந்தியர்.
.
“அப்படியானால், பிறகு ஏன் இந்த டேப்லெட்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளன?” என்று கேட்டார், வெள்ளைக்காரர்.
.
“நான் தான் சொன்னேனே ஐயா, அவைகள் யாவும் IQ TABLETS [ஐக்யூ டேப்லெட்ஸ்] என்று;
.
நேற்று இரவு தான், முதன்முறையாக நீங்கள் மூன்றே மூன்று டேப்லெட்ஸ் மட்டும் சாப்பிட்டுள்ளீர்கள்;
.
அவை இப்போது நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டன பாருங்கள்;
.
உங்களை நன்கு சிந்திக்க வைத்துள்ளன பாருங்கள்.
.
என்னிடம் கேள்விகள் கேட்கத் தூண்டியுள்ளன பாருங்கள்;
.
அதனால் தான் அவைகளின் விலை சற்று அதிகம்;
.
அப்போ நான் வரட்டுமா .....”
.
என்று சொல்லி விடைபெற்று, ரயிலிலிருந்து இறங்கி விட்டார், அந்த புத்திசாலித் தென்னிந்தியர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...