Thursday, July 25, 2019

மாற்றம் என்கிற வார்த்தையை தவிர... அனைத்தும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது...!!

18வயதில் படிப்பை முடித்து,20வயதில்
பணிக்குச் சேர்ந்தவன்;
இரண்டு வருடத்தில் வந்த கடனை கட்டிவிட்டு போய்டுவோம்,
கடனை கட்டிய பிறகு;
வந்ததுதான் வந்துட்டோம் ஒரு வீட்ட கட்டிட்டு போய்டுவோம்,
இவளவு பெருசா கட்டியாச்சு, கடன் வேற கொஞ்சம் வந்துடுச்சி அத முடிச்சுட்டோமனா வேலையே இல்ல,
அதையும் கட்டி முடித்தவுடன்;
சரி வயசு வேற ஆகிடுச்சு,முடி வேற கொட்டிடுச்சு போய்டு கல்யாணம் பன்னிட்டு ஒரே மாசத்துல திரும்பி வந்திடுவோம்,
கல்யாணம் பன்னியாச்சு,குழந்தையும் பெத்தாச்சு போய் என்ன பன்ன போறோம்?
ஆண் குழந்தையா இருந்தா கான்வென்ட் ஸ்கூல் சேக்கனும்,
பெண் குழந்தையா இருந்தா கல்யாணத்துக்கு நகை சேக்கனும்,
இடையில இது வேற,
இவ்வளவு வருஷமா இருக்கோம், ரெண்டு செண்டு இடத்த வாங்கி போடலனா எவன் மதிப்பான்???
அதற்கிடையில் குழந்தைகள் வளர,
நம்ம பொண்ணுக்கு இந்த ஊரிலே பன்னாத மாதரி ரொம்ப பெருசா கல்யாணம் பன்னனும்,
இப்ப போய்டு,வயசு ஆகிடிச்சே எப்பயா ஊருக்கு போறனா?
என் பையனுக்கு இப்பதான் பாஸ் ஃபோட் எடுத்திருக்கு,நான் இருக்கும் போதே அவன இங்க இறக்கி விட்டுட்டு போயிடுவேன்...
இப்படி தான் நகர்கிறது ஒவ்வொரு வெளி நாடடு வாழ் தமிழனின் வாழ்க்கையும் இதில் நானும் ஒருவன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...