பேங்கில் ..,மூன்று கல்லூரி மாணவிகள் எனக்கருகில் ஏதோ அப்ளிகேசன் ஃபார்மை எழுதி கொண்டிருந்தார்கள் ..
ஒருத்தி கேட்டாள் , identification marks ந்னு கேட்ருக்காங்களே எந்த மார்க்கைடி எழுதறது எஸ் எஸ் எல் சியா இல்ல ப்லஸ் டூ மார்கையா ?
அடுத்தவ ," SSLC mark தான் . அதான நம்ம date of birthக்கு தரோம் அதான் identification mark அதனால அந்த மார்க்கதான் எழுதணும்" என்று படு கான்பிடண்டாக சொன்னாள் .
மூன்றாம் பெண் " அதுவா இருக்காது identification mark ந்னா எங்கயாது அடி வாங்கின மார்க் டி "என்றாள் ..
அட்டா இந்த மூனுலயே இதுதான் கொஞ்சம் தெளிவா இருக்குன்னு நினச்சிட்டு இருக்கும் போதே அவ சொன்னா " அதனால நம்ம அரியர்ஸ் மார்க்கா இருக்கும் "
எனக்கு இதுக்கு மேல தாங்கல ,
" கொழந்தைகளா , அது இல்ல identification mark ந்னா உங்க முகத்துல பிரத்தியேகமா ஏதாவது தழும்போ மச்சமோ இருந்தா அதுதான்மா ஐடெண்டிபிகேஷன் மார்க் ..இதோ பாருங்க என் நெத்தி புருவத்து கிட்ட ஒரு தழும்பு இருக்குல இது நான் ஒன்னாவது படிக்கும் போது ஏற்பட்ட மார்க் " என்றேன்..

" ஓ ..நீங்க படிச்ச காலத்துல மார்க் பேப்பர்ல போடாம மூஞ்சிலதான் போடுவாங்களா? " என்று சொல்லி சிரிக்குதுங்க..
எனக்கு தேவைதான்...நல்லா வேணும் ..பேங்க் போனோமா உன் வேலய மட்டும் பார்த்தோமான்னு வராம அக்கம் பக்கம் காது குடுத்து வாங்கிக் கட்டிக்கணுமா ??
No comments:
Post a Comment