நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமை இடங்களாக கொண்டு தனி மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்தநிலையில், தென்காசி, செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்துக்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சர்க்கரை கூடுதல் இயக்குனர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்திற்கான தனி அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அவர் உதவி செய்வார்.
தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ.ஜான் லூயிஸ், தென்காசி மாவட்ட உருவாக்கத்திற்கான தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அவர் உதவி புரிவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment