Tuesday, July 30, 2019

" வில்வ பழம் "


சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை பாதுகாக்க இந்த பழம் ஒன்றே போதும்!
சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்க வில்வ மரத்திலிருந்து பெறப்படும் பழம் பெரிதும் உதவி புரிகின்றது.
அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சமாக வில்வம் மரம் திகழ்கின்றது.
வில்வ பழம் அல்லது மர ஆப்பிள் என்று அழைக்கப்படுகின்றது.
இதில் இயற்கையாகவே இருக்கும் மருத்துவ குணங்கள் பல நோய்க்ளைல் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவி புரிகின்றது.
அந்தவகையில் வில்வ மரத்தின் பழம் உங்களை எப்படி ? எந்த நோயிலிருந்து பாதுகாக்கிறது என இங்கு பார்ப்போம்.
மலச்சிக்கல், குடல்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்தவும் இதன் சாறை குடிப்பது உங்களின் செரிமானத்தை உடனடியாக ஊக்குவிக்கும்.
வில்வ மரத்தின் இலைகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஃபெரோனியா கம் இரத்தத்தில் இருக்கும் குளூகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயை குறைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும், உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சளி, தலைவலி, கண் மற்றும் காது வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
வில்வ பழம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சிறப்பாக்கவும் பயன்படுகிறது. அதிகளவு புரோட்டின் இருக்கும் இது சேதமடைந்த திசு மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும்
இயற்கை கிருமிநாசினியான இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போவதை தடுக்கிறது.
மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...