Saturday, July 27, 2019

*🔯அமாவாசை அன்று வீட்டில் கோலம் போடலாமா?*

1. அமாவாசை அன்று வீட்டில் கோலம் போடலாமா?
 அமாவாசை அன்று வீட்டில் கோலம் போடக்கூடாது.

 அமாவாசை மற்றும் சிரார்த்த தினங்களில் நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் வீட்டிற்கு வரும்.
 அவ்விதம் வரும் ஆன்மாக்கள் வாசலில் கோலம் இருப்பின் உள்ளே வர இயலாது.
 பெரியோர்களின் ஆன்மாக்கள் பித்ரு பூஜை நாட்களில் வீடுகளுக்கு வந்து நம்மை ஆசிர்வசிப்பது நல்லது.
2. அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்கலாமா?
 அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்கக்கூடாது.
 புதிய வாகனம் வாங்கினால் மேற்கொண்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்காது.
3. அமாவாசை தர்ப்பணம் என்பது தாயாருக்கா அல்லது தந்தையாருக்கா? தந்தை உள்ளார். ஆனால் தாயார் இல்லை. தர்ப்பணம் செய்யலாமா?
 அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே.
 தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம்.
 மாதாந்திர தர்ப்பணம் செய்யக்கூடாது.
4. சுப நிகழ்ச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாமா?
 சுப நிகழ்ச்சிகளுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல.
 அமாவாசை பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களின் வழிபாட்டிற்கு சிறந்தது.
 அமாவாசையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
 வேள்விகள், தான தர்மங்களை செய்யலாம்.
5. அமாவாசை அன்று எந்த காரியங்களை செய்யலாம்?
அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம்.
 அமாவாசை பித்ருக்களை வழிபட உகந்த நாள்.
6. அமாவாசை அன்று நகைகள் வாங்கலாமா?
 அமாவாசையை விடுத்து மற்ற சுப திதிகளில் நகைகள் வாங்கலாம்.
7. அமாவாசை தினத்தில், இராகு காலத்தில் வியாபாரத்தை தொடங்கலாமா?
 அமாவாசை தினத்தில், இராகு காலத்தில் வியாபாரத்தை தொடங்க வேண்டாம்.
8. வீட்டில் நிச்சயம் செய்த பின் முன்னோர்களுக்கு வருட திதி மற்றும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாமா?
 வீட்டில் நிச்சயம் செய்த பின் முன்னோர்களுக்கு வருட திதி மற்றும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.
 முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறமுடியும்.
 பித்ருக்களின் ஆசிர்வாதம் இருப்பின் நல்ல இல்லற வாழ்வும், தொழிலில் மேன்மையும் உண்டாகும்.
9. அமாவாசைக்கு மறுநாள் புதிய வேலையில் சேரலாமா?
 அமாவாசைக்கு அடுத்து வரும் நாளை தவிர்த்து மற்ற நாட்களில் புதிய வேலையில் சேரலாம்.

*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...