Friday, July 26, 2019

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

ஓய்வுபெற்ற‍ பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூத்தவர் என்று சொல்கிறார்கள். இவரைப்போன்றே பல ஆண்கள், தங்களை விட வயது அதிகமுள்ள‍ பெண்களையே திருமணம் செய்து கொள்ள‍ நினைக்கின்றனர். அது தவறு எப்போதும் ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே அந்த ஆண் திருமணம் செய்து கொள்ள‍ வேண்டும் அதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக‌ பெண்களுக்கு 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பால பெண்களுக்கும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவின் மீதிருக்கும் நாட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
குறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது. இந்த வயது இடைவேளை இல்லாத போது, அவரவர் உணர்வுகளை சரியாக புரிந்துக் கொள்ள இயலாது போகும். ஒருவருக்கு மற்றவரது உணர்வுகள் கேலியாகவும், விளையாட்டாகவும், அதிகமாக தேவையின்றி வெளிப்படுத்து வதாகவும் தோன்றும்.
இவை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் உறவினுள் பிரிவை ஏற்படுத்தும். ஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும். ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கி விடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.
வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். பெண்ணிற்கு விரைவாகவே நாட்டம் குறைந்து விடும். ஆண்கள் உடலுறவிற்கு அணுகும் போது மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஆண் எது செய்தாலும் கணவனைப் போல பாவிக்காது, குழந்தையைப் போல அந்த பெண் பார்ப்பாள். தொடக்கத்தில் ஆனந்தமான இருந்தாலும் ஆண்டுகள் செல்ல செல்ல இவர்களுக்கிடையே மனக் கசப்பு ஏற்பட்டு இல்ல‍த்தில் மகிழ்ச்சி தொலையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...