Saturday, July 20, 2019

திமுகவை துவக்கிய ஐம்பெரும் தலைவர்களின் குடும்பங்கள் எங்கே?

திமுகவில் அண்ணாத்துரை , ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், என். வி.நடராஜன், மதியழகன் ஆகியவர்கள் மட்டுமே 'ஐம்பெரும் தலைவர்கள் ' என்று அழைக்கப்பட்டவர்கள்.
18.9.1949-ல் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட 28 பேர் பட்டியலில் , மு.கருணாநிதியின் பெயர் கடைசியாக இருந்தது. திமுகவை துவக்கியவர்களில் ஒருவராக கருணாநிதி இருந்தாலும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அவர் இல்லை. அன்றைய ஐம்பெரும் தலைவர்கள் என்ன ஆனார்கள் ? அவர்கள் குடும்பங்கள் எங்கே ?
அண்ணாத்துரை தனது வளர்ப்பு மகன்களான டாக்டர். பரிமளம், இளங்கோவன், ராஜேந்திரன் யாரையுமே கட்சிப் பக்கமோ, ஆட்சிப் பக்கமோ அனுமதிக்கவில்லை.
அண்ணாத்துரைக்கு பிறகு, மருத்துவர் பட்டம் பெற்ற பரிமளத்தை திமுக பக்கமே அண்டவிடவில்லை கருணாநிதி. 2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பரிமளத்தின் வாரிசுகள் மலர்வண்ணன், செளமியன், இளவரசி போன்றோரைப் பற்றி திமுகவினருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை.
மதியழகன் மீது 1970ல் லஞ்ச, ஊழல் குற்றம் சாட்டி , கருணாநிதி அவரை ராஜினாமா செய்ய வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் முழுப்பொய்யென்று பின்பு நிரூபண மாகியது. மதியழகனை ஏன் பொய் குற்றம் சாட்டி ஓரம் கட்டினார் கருணாநிதி ? (டங்கன் ஃபாரஸ்டர் என்கிற ஆய்வாளர் ஆசியன் சர்வே என்ற பிரபல ஆய்வு பத்திரிக்கையில் Factions and Film Stars : TAMILNADU politics since 1971 என்கிற கட்டுரையில் இதைக் கூறியிருக்கிறார்.)
மதியழகன் தன்னுடைய தலைமைக்கு ஆபத்தானவர் என்று கருதிய கருணாநிதி அவர் மீது பொய் குற்றம் சாட்டி விலக்கினார். மதியழகன் பிறந்த கணியூர் குடும்பத்தை , திராவிட இயக்கத்தின் தலையாய குடும்பம் என்று கூறுவாராம் அண்ணாத்துரை.
1975ல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகி , அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர் அரசில் அமைச்சரானார். மறைந்த நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் , பேரன் ஜீவன் போன்றோர் எங்கு இருக்கிறார்கள் என்று நிச்சயம் இன்றைய திமுகவினருக்கு தெரியாது.
என்.வி.நடராஜன் 1975ல் காலமானார். அவருடைய மகன் என்.வி.என்.சோமு அவருக்கு பிறகு கருணாநிதியின் தலைமையை ஏற்று திமுகவில் இருந்தார்.
இப்படி முடிந்தது திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் கதை.
கருணாநிதி குடும்ப வாரிசுகளின் இன்றைய நிலையையும் , ஐம்பெரும் தலைவர்களின் குடும்பத்தார் நிலையையும் ஒப்பிட்டால், திமுக என்ற கட்சி எங்கு துவங்கி, எங்கு முடிந்திருக்கிறது என்பது தெரியும்.

- துக்ளக் 24.7.2019 இதழிலிருந்து…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...