தமிழகம் முழுவதும் தற்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த பேச்சுக்கள் மற்றும் பரபரப்புகள் அதிகம் எழ தொடங்கியுள்ளன, தமிழக ஊடகங்கள் தொடர்ந்து இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று விவாதங்கள் நடத்தி வருகின்றன.
நாங்குநேரி தொகுதியை காட்டிலும் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அதிகம் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் சட்டத்துறை அமைச்சர் சி வி. சண்முகம் மற்றும் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகிய இருவருக்கும் உள்ள நேரடி போட்டிதான். இருவரும் எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தங்கள் ஆதரவாளர்களுக்கு போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளன.
இந்நிலையில் தற்போது எந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியை கைப்பற்றும் என்று சிங்கப்பூரை சேர்ந்த “OB’C” நிறுவனம் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை இங்கு திமுக அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வலுவாக இருக்கின்றன கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராதாமணி 63757 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேலு 56845 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட ஆதவன் 41428 வாக்குகளும் பெற்றனர்.
தற்போது நடந்த 2019 விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் அதிமுக கூட்டணி வேட்பாளரை விட 8 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார்.
இந்நிலையில் OBC வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளின் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் விக்கிரவாண்டி தொகுதி என்பதும், திமுக வேட்பாளர் வெளி தொகுதி என்பதும் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கிறது, திமுகவை பொறுத்தவரை பாமக மற்றும், தேமுதிக நிர்வாகிகளை அதிகம் இழுத்துவருவது அவர்களுக்கு பலத்தை அளிக்கும் என்று நிலைத்திருக்கிறது.
தற்போதைய களநிலவரப்படி அதிமுக கூட்டணி 42-45 % வாக்குகளை பெரும் என்றும், திமுக கூட்டணி 33-36 % வாக்குகளை பெரும் என்றும் தெரிவித்துள்ளது, இதற்கு அதிமுகவிற்கு கூட்டணி கட்சிகளின் வாக்குகள் கிடைப்பதும், நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதும் களத்தில் எதிரொலிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
முடிவு :-
விக்கிரவாண்டி அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment