Wednesday, October 9, 2019

இந்த கண்ணாடி லாம் யார் கால் லயாவது குத்தினா.

வீட்டு பால்கனியிலிருந்து இந்த குழந்தைகளைப் பார்த்தேன்...கீழே அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்...இருபது நிமிடம் கழித்து, வீட்டை விட்டு வெளியே வந்த போதும்,அப்படியே அமர்ந்திருக்க...ஹோய்....school போகலயா என பேச்சுக் கொடுத்த படியே, தள்ளி நின்று,என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்...நாளைக்கு தான் school என்ற படியே, மீண்டும் அவர்கள் செய்த வேலையைத் தொடர்ந்தார்கள்.அருகில் சென்று, என்ன பண்றீங்க எனக் கேட்டேன்..
ரெண்டு தெரு தள்ளி இருக்கோம்...அம்மா சாமி கும்பிட பூ பறிச்சுட்டு வர சொன்னாங்க, அப்ப,இங்க உடைஞ்சு கொட்டி கிடக்குற கண்ணாடி கால் ல குத்திடுச்சு...வேற யார் கால் லயும் குத்திடக் கூடாது ல்ல..அது தான் கண்ணாடி எல்லாம் எடுத்து ஓரமா போட்டுக்கிட்டிருக்கோம் என்றார்கள் ❤️ ❤️ ❤️...
வெறும் கையோடு எடுக்காதீர்கள் என பதறினேன், பெரிய பெரிய துண்டா இருக்குறதை எல்லாம் எடுத்துட்டோம்...இந்த சின்ன தூளா இருக்குறதை கல் வச்சுடுவோம் என பதில் வந்தது...
ஒரு நொடி மட்டும் நிமிர்ந்து பார்த்து,பதில் சொல்லி விட்டு, வெறும் காலோடு,வெயிலில் அமர்ந்து,கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தவர்களுக்கு,, கொஞ்சம் உதவி செய்து விட்டு புகைப்படம் எடுத்தேன்...
லேட் ஆ பூ பறிச்சுட்டு, வீட்டுக்கு போனா,உங்கம்மா திட்ட மாட்டாங்களா என வம்பிழுத்தேன்...திட்டுவாங்க தான்...ஆனா,இந்த கண்ணாடி லாம் யார் கால் லயாவது குத்தினா,எனக்கு வலிச்ச மாதிரி வலிக்கும் ல,அதான் ஓரமா எடுத்துப் போட்டு லேட் ஆ போறோம்...அம்மா திட்டுனா பரவாயில்லை என சிரித்தார்கள் ❤️..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...