கனிமொழி அவர்களுக்கு ஒரு கேள்வி.
"இறைவன் முன் அனைவரும் சமம் என்று கூறுவது எல்லாம் பொய்யா? நீங்கள் அதிகமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால், விரைவாக இறைவனை தரிசனம் செய்ய முடியும். இல்லாவிட்டால், 10 மணி நேரம் முதல் 2 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும்.
கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?'' என நீங்கள் திருச்சியில் நடந்த தி மு க மாநாட்டில் பேசினீர்களே?
இதே கேள்வி துர்கா ஸ்டாலினுக்கும் பொருந்துமா கனிமொழி அவர்களே? இறைவன் முன்பு அனைவரும் சமம் தானே? ஆனால், சிறப்பு தரிசனம் மூலம் உங்கள் அண்ணி திருப்பதி சென்று வழிபட்டதை கன்டிப்பீர்களா? அப்படி கண்டிக்கவில்லையென்றால், உங்கள் குடும்பத்தின் முன்பே அனைவரும் சமம் அல்ல என்று ஒப்பு கொள்வீர்களா? பாதுகாப்பு படையினர் ஏன் உண்டியலை பாதுகாக்கிறார்கள் என்று கேட்டீர்களே?அங்கே வருகிறவர்களிடமிருந்து பாதுகாக்கத்தான் என்றபொருள்பட கேட்டது உங்கள் குடும்பத்திற்கும் பொருந்துமா? இல்லை என்று நீங்கள் மறுப்பீர்களேயானால், தாங்கள் அன்று பேசியதற்கு இன்று மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? நீங்கள் கேட்பீர்களா?
No comments:
Post a Comment