Sunday, October 13, 2019

'ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சி'

''ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க.,ஆட்சி தான்'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி ரெட்டியார்பட்டியில் நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது: இடைத்தேர்தல் தோறும் தான் தி.மு.க.,தலைவர் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி விட்டார்கள். தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்தை நாங்கள் கிடப்பில் போட்டுவிட்டதாக ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

நாங்குநேரி, இடைத்தேர்தல், ஊழல், திமுக, முதல்வர், பிரசாரம்

தற்போது அங்கு திட்டப்பணிகள் நடக்கிறது. 2020க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பச்சையாறு திட்டத்தையும் செயல்படுத்துவோம். அ.தி.மு.க., அரசு ஊழல் செய்கிறது என பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.கதான்.

ஏழை எளியவர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது திமுக தான். தை பொங்கலுக்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். தமிழகத்தில் விரைவில் 5 லட்சம் பேருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். இடைத்தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அ.தி.மு.க., அரசு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வது தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காக செல்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறீர்கள் என மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். இந்திய பிரதமர் வெளிநாடுகளில் வங்கிகளில் யார் யார் பணத்தை வைத்து உள்ளார்கள் என்பதை பட்டியல் எடுத்து உள்ளார். அந்தப் பட்டியலில் தி.மு.க.,வினர் உள்ளதாக தகவல்.

அதனால் தி.மு.க.,வினர் அச்சப்படுகின்றனர். ஸ்டாலின் தவறான கருத்துக்களை தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் வருங்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகக் கூட முடியும், என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...