Monday, October 7, 2019

தமிழகம் முழுதுமே இப்படி டுபாக்கூர்கள் இருக்கின்றனர்.

சென்னையில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் ஏதாச்சும் ஒரு பத்திரிகைகளில் அடையாள அட்டை வாங்கிப் புடாறாய்ங்க. அப்படி ஒரு அடையாள அட்டை வந்தவுடன் உடனடியாக செய்யும் முதல் வேலை தங்களின் வாகனங்களில் பிரஸ் அப்படீன்னு ஸ்டிக்கர் ஒட்டுகிறாய்னுஹ.. இதனால் எவர் உண்மையான பத்திரிகையாளர் என்ற குழப்பம் காவல் துறைக்கு ஆஊஈணேஏ ஈறூஊஊ. இந்நிலையில் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தில் பணி புரிபவர் ஒருவர் அடையார் மத்திய கைலாஷ் சிக்னல் அருகே வரும் போது ட்ராஃபிக் போலீஸ் ஒருத்தர் அவரை மடக்கினர். அப்போ அந்த ஊபர் பார்ட்டி தினசரி நாளிதழின் பெரிய நிறுவனத்தின் பெயர் சொல்லி உள்ளார். அடையாள அட்டை கேட்ட போது மறந்து வூட்டுலே வைச்சிபுட்டு வந்துட்டதா தெரிவிச்சா. அப்போ அவ்வழியாக வந்த ரியல் மீடியாமேன் ஒருவர் இந்த போக்குவரத்து போலீசார் தெரிந்த முகம் என்பதால் வாகனத்தை நிறுத்தி இந்த நபர் தங்களுக்கு தெரியுமா? இவர் பத்திரிகையில் பணி புரிவதாக கூறுகிறார் என கேள்வி கேட்க அந்த செய்தியாளர் அய்யே.. நான் இவரை பார்த்தது இல்லை என்று சொல்லி...முடிவதற்குள் அந்த ஊபர் ஆசாமி போக்குவரத்து போலீசாருக்கு டேக்கா கொடுத்து எஸ் ஆகிட்டார். அப்போ அந்த ரியல் செய்தியாளர் உடனடியாக செல் போனில் போனவரை கிளிக் செய்தார். அந்த போட்டோ தானுங்க இது...?
இது போன்று சம்மந்தம் இல்லாத நபர்களுக்கு பத்திரிகை என்ற போர்வையில் அடையாள அட்டை வழங்கும் பத்திரிகை ஆசிரியர்களை விரைவில் காப்பு கட்ட இருப்பதா போலீசார் வயக்கம் போல் தெரிவிச்சதா ஒரு சேதி வருது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...