Friday, October 11, 2019

மோடியின் நிழலாக நின்ற அதிகாரி யார்?

பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங், நேற்று மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் இருவர் உதவினர். ஒருவர் சீன அதிகாரி. மற்றொருவர், இந்திய அதிகாரியான மதுசூதன் ரவீந்திரன்.




இவர், சீனத் தலைநகரான, பெய்ஜிங்கில் உள்ள, இந்திய துாதரகத்தின் முதன்மை செயலர். கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த, மோடி - ஜின்பிங் சந்திப்பில், மொழி பெயர்ப்பாளராக இருந்தார். அவரே, இந்த சந்திப்பின்போதும், மொழி பெயர்ப்பாளராக பணி அமர்த்தப்பட்டார்.





இவர், 2013ல் சீனாவுக்கான, இந்திய துாதரகத்தின், இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதன்மை செயலராக உள்ளார். சென்னை, அண்ணா பல்கலையில், பொறியியல் படித்தவர். இந்திய வெளியுறவுப் பணியில், 2007ல் சேர்ந்தார். பணியில் பெரும்பாலான நாட்களை, சீனாவில் கழித்துள்ளார். இவருக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான, மாண்டரின் உட்பட, பல மொழிகள் நன்கு தெரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...