Friday, March 27, 2020

,🌹கொரோனாவால் தல அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! அசந்துபோன காவல்துறை !🌹

நடிகர் அஜித் குமார் தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த ஒரு நடிகர் என்பதனை நாம் அறிவோம்.
இவர் தனது விடா முயற்சியினால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார்.
தல அஜித், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.
நடிகர் அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் இவருக்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். தற்போது இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை காவல் துறை நம்மை எச்சரிக்கும் விதத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் கொரானா விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தச் சூழ்நிலையிலிருந்து இந்தியாவைக் காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் மதுரையில் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம்
அடைந்ததையடுத்து அங்கிருந்து கொரோனா வைரஸ் பரவாமலிருக்க ட்ரோன் மூலம் தடுப்பு ஸ்பிரேக்களை அடித்து முதலில் சோதனை செய்தனர். "தக்ஷா" எனப்படும் அந்த ட்ரோன் சிறந்த முறையில் வேலை செய்ததால் அதனை அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த "தக்ஷா" ட்ரோன் ஐஐடி மாணவர்களால் “தல” அஜித்தின் தலைமையில் உருவானதாகும். மாணவர்களின் இந்தச் செயலுக்கும் தல அஜித்தின் தொழில்நுட்ப அறிவிற்கும் தமிழ் மக்கள் இந்த சூழலில் தங்களவு பாராட்டினைச் சொல்லி வருகின்றனர்.
தேசப்பணியில் பங்கு கொண்டு
பல உயிர்களைக் காக்க தொண்டாற்றிய நடிகர் அஜித் குமாரின் குழுவுக்கு உங்கள் பாராட்டுக்களைத் தெரியுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...