Tuesday, March 24, 2020

இந்த தருணத்தில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

1. இந்த நாட்களை ஒரு அவசர நிலையாக கருதி முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.
2.கரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய் கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு இது வழக்கமாக வரும் ஒரு சளி இருமலை போல வந்து சரியாகிவிடும். அதனால் அப்படிப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பதட்டப்படாமல் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.
3.அரசாங்கத்தின் அவசரகால தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் போன்றவை இருந்தால் மட்டும் மருத்துவமனைக்கு சென்றால் போதும்
4.முடிந்த வரை உங்களது நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் முக்கியமாக வீட்டில் இருந்து எந்த நேரமும் கரோனா தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்ப்பதை தவிருங்கள் அதுவே ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
5. முதியவர்கள் இருக்கும் வீடு என்றால் உங்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி வையுங்கள் அவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.
6.அரசாங்கமும் மருத்துவர்களும் சொல்வதை தவிர வேறு யார் சொல்வதையும் நம்பாதீர்கள், குறிப்பாக அதை மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யாதீர்கள்.
7. இந்தியாவிலேயே மிக வலுவான மருத்துவ கட்டமைப்பையும், மிகத் திறமையான மருத்துவர்களையும் கொண்ட மாநிலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இங்குள்ள மருத்துவர்கள் எல்லாம் உங்களில் இருந்து வந்தவர்கள்தான். அதனால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதனால் எந்த அச்சமும் இன்றி இந்த பேரிடரை நாம் எதிர்கொள்வோம்.
8. முக்கியமாக நீங்க உணர்ந்துகொள்ள வேண்டியது நீங்கள் ஒரு தனி மனிதர் கிடையாது இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் உங்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.
நாம் அனைவரும் நமது பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து நின்றால் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வந்து விடலாம். அப்படி நாம் மீள்வது ஒரு வரலாறாகவும், மற்றவர்களுக்கு பாடமாகவும் பின்னாளில் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...