Sunday, March 22, 2020

*கோவில்களில் மூலஸ்தானத்தில் கற்சிலை* *, ஏன்?*

கல்லில் பஞ்சபூதங்கள் உள்ளன.
1.கல்லில் ஆகாயம் உள்ளது ஆகாயம் ஒளியினை பிரதிபலிக்கும். இன்றைய வானொலியே இதற்குச் சான்று.
மலைப்ராந்தியங்களிலோ, கற்பிராகராங்களிலோ எதிரொலி உண்டாகிறது. இதன்மூலம் கல்லில் ஆகாயமான பஞ்சபூதம் உள்ளதை உணரலாம்.
2.காற்று. கல்லில் காற்று உள்ளது. கல்லுக்குள் இருக்கும் தேரை உயிா் வாழ்வதே இதற்கு சான்றாகும்.
3.நெருப்பு :கல்லில் நெருப்பு உள்ளது. இரண்டு கற்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது நெருப்பு உண்டாவதைக் காணலாம். முற்காலத்தில் சிக்கி முக்கி கற்களை வைத்து நெருப்பை உண்டாக்கி உபயோகித்துள்ளார்கள்.
4.தண்ணீர், கற்பாரைகளில் நீர் ஊற்று இருப்பதுவே இதற்குச் சான்று. திருப்பரங்குன்றம் மலை மீது பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த குகை உள்ளது. அங்கு ஒரு நீர் ஊற்று இன்றும் உள்ளது. மலைமேலும் உள்ளது.
5.பூமி கள்:பூமியில்தான் கிடைக்குமே அன்றி வேறெங்கும் கிடைக்காது.
ஆகவே இறைவன் பஞ்சபூத வடிவானவன் என்பதைக் காட்டவே மூலஸ்தானத்தில் கல்லால் விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சலனம் அடையக்கூடாது என்ற காரணத்தாலும், உறுதியாக இருக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை போற்றி திருவகலில், மணிவாசகப் பெருந்தகை
""பாாிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி """"
என்று தொடங்கித் தெரிவிக்கிறார்.
சிவசிவ திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...