Monday, March 23, 2020

நம் முன்னோர்கள் கடவுளை வழிபடும் வழக்கம் மூலம் சுகாதாரத்தை, நோய்த்தடுப்பை செயல் படுத்தினார்கள்.

இப்போது வந்து உள்ள (கொரோனா) போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள்.
கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர்.
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்.
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள்.
வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள்,
இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்.
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்,
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.
இவை அனைத்தும் கிருமி நாசினிகள், கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடியது.
மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்கள்.
பருத்தி ஆடையில் மஞ்சளை தடவி அணிந்தால் கிருமிகள் நம் உடலை அண்டாது.
அரைத்த மஞ்சள் தண்ணீரை வீட்டிலும் வாசலிலும் தெளிப்பார்கள். இது வீட்டில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்க வல்லது.
இதனால் திருவிழா முடிவதற்குள் நோய்கள் குணமாகிவிடும்.
இவ்வாறு தான் நம் முன்னோர்கள் கடவுளை நம்பி கடவுள் மேல் பாரத்தை போட்டு நலமுடனும் பல வருடங்களாக வாழ்ந்துள்ளனர்.
தற்போது இதை தான் விஞ்ஞான ரீதியாக 14 நாட்கள் தனிமையும் வெளியூர் செல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார்கள்.
சுத்தமாக இருங்கள் (கை) கழுவுங்கள் எனக் கூறி பயமுறுத்துகிறார்கள்.
நம் முன்னோர்கள் கடவுளை வழிபடும் வழக்கம் மூலம் சுகாதாரத்தை, நோய்த்தடுப்பை செயல் படுத்தினார்கள்.
இதனால் பயமின்றி நலமுடன் வாழ்ந்தனர்.
இந்த பழக்கவழக்கங்கள்தான் இப்போதைய பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை எனக் கூறி பல வழிகளில் நமது நல்ல பழக்கம் வழக்கங்கள் நடைமுறையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
எனவே, நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல வழிமுறைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதால் நன்மைதானே அன்றி கேடில்லை என்று உறுதி.
நம் முன்னோர்களை மூடர்கள் என்றோர் தற்போது உண்மையை அறிந்து, வெட்கி தலை குனிந்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...