Friday, March 27, 2020

வைரஸ் மூலமாக பரவுவதால்....

டாக்டர்.... கொரோனா பாதிப்பு வரக்கூடாது ன்னு வீட்ல இருக்க சொல்றீங்க !!
சரி ன்னு வீட்ல இருக்கோம்.
தும்மல், இருமல் ன்னு லேசா இருந்தா பயப்பட வேணாம் ன்னு சொல்றீங்க. மூச்சு வாங்கும் தொந்தரவு, அதீத காய்ச்சல், அதிகமாக வறட்டு இருமல் இருந்தா மட்டும் உதவி மையத்துக்கு போன் பண்ண சொல்றீங்க.
சரி ன்னு நாங்களும் உப்பு போட்டு வாய் கொப்புளிச்சிட்டு சுத்த பத்தமா வீட்லயே இருக்கோம்
ஏன் டாக்டர் வெளியே போக வேணாம் ன்னு சொல்றீங்க ??
கொரோனா 80 சதவிகித மக்களுக்கு ஒன்னும் பெரிய பாதிப்பு பண்ணாது ன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் வீட்ல இருக்கணும் ??
நியாயமான கேள்வி தான் ல....
அதாவது சார்.... உங்க உடலில் ஒரே ஒரு வைரஸ் கிருமி மட்டும் ஊடுருவி நோய் வர வைக்காது. நம்ம உடலில் எந்த கிருமி நுழைந்தாலும் அதை எதிர்க்க நமது நோய் எதிர்ப்பு சக்தி தயாராகி போரிடும்.
கிருமித்தொற்று குறைவான அளவில் தாக்கினால் நோய்எதிர்ப்பு சக்தி வெல்லும்; அதிக அளவு கிருமி இருந்தால் கிருமி வெல்லும்.
இதை VIRAL LOAD என்போம்.
இப்போ... நீங்க வெளியே போறீங்க ன்னு வெச்சிப்போம். தினசரி 500 மக்களை சந்திக்கிறீங்க. அவ்வளவு மக்கள் கிட்ட இருந்து எக்கச்சக்கமான கிருமி உள்ளே நுழையும். உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அவ்வளவு அதிக கிருமிகளுடன் போர் புரிந்து ஜெயிப்பது கஷ்டம்.
ஆனா, இப்போ வீட்ல இருக்கீங்க. வீட்ல இருக்க யாருக்கோ ஒருவருக்கு கொரோனா இருக்கு ன்னே வெச்சிப்போம். அவருக்கு பெருசா எந்த தொந்தரவும் இல்ல. அவர் அந்த 80% சதவிகித மக்கள்ல ஒருவர் ன்னு வெச்சிப்போம். அவர் கிட்ட இருந்து உங்களுக்கு வைரஸ் பரவுது. ஆனா பாருங்க ; ஒருவரிடம் இருந்து நீங்கள் பெரும் கிருமிகளின் அளவு மிக மிக குறைவு.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வைரஸுடன் போரிட்டு ஜெயிக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உங்களை காக்கும். நீங்களும் அந்த 80 சதவிகித மக்கள் மாதிரி பெரிய பாதிப்புக்கு போக மாட்டிங்க.
அதனால தான் வீட்லயே இருங்க.... வெளியே வர வேண்டாம். அந்த கிருமியின் VIRAL LOAD நம்மை பெருமளவு சென்றடைந்து விடக்கூடாது ன்னு தான் வீட்ல இருக்க சொல்றோம்.
இன்னும் புரியுற மாதிரி சொல்லணும் ன்னா, ஒருத்தன் அடிச்சா திருப்பி அடிக்கலாம்.
ரெண்டு பேர் அடிச்சா எப்டியோ சமாளிச்சிட்டு ஓடி வந்துடலாம்.
ஆனா 10 பேர் அடிச்சா ??? மரணம் தான்.
Low Viral Load க்கும் High Viral load க்கும் இருக்கும் இந்த மெல்லிய கோடு தான் நம்ம வீட்டு வாசல்படி. உள்ளே இருந்தால் Low Load. வெளியே போனால் High Load.
அதனால கொஞ்ச கிருமி உங்களை தாக்குனா கூட உங்க நோய் எதிர்ப்பு சக்தி உங்களை காக்கும் வாய்ப்பு உண்டு.
வீட்டில் இருங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். அதீத காய்ச்சல், அதீத இருமல், மூச்சு வாங்கும் தொந்தரவு இல்லாத வரையில் பெரிதாக கவலைப்பட வேணாம். இதெல்லாம் ஏற்பட்டால் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்.
நீரிழிவு போன்ற உடல்உபாதை கொண்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லக்கூடாது. நீங்களும் முடிந்த வரையில் அவர்களிடம் நோய் பரப்பும் செயல்களை செய்யாமல் இருக்கவும் சார்.
புரிஞ்சதா சார் ??
புரியுது டாக்டர்.... வீட்லயே இருக்கேன்.
நன்றி ❣️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...