Sunday, March 22, 2020

அதிரடி ஆசாமி ராஜேந்திர பாலாஜி..........

அதிமுகவின் தாமரைகனிக்கு பின் அதிரடி ஆசாமி ராஜேந்திர பாலாஜி
அன்னாரின் அதிரடியும் தெனாவெட்டான ஆனால் உண்மையான வெள்ளந்தியான பேச்சும் அவருக்கு தனி ரசிக பட்டாளத்தை பெற்று கொடுத்தது
திமுக , தமிழ்தேசிய இம்சைகளை அவர் கிழிக்கும் அழகே கண்கொள்ளா காது கொள்ளா காட்சி
அந்த பாலாஜி நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கபட்டிருக்கின்றார், ஏதோ பொது கூட்ட நிகழ்வு என்கின்றார்கள்
உறுதியாக சொல்லலாம் அவரின் அபரிமிதமான இந்து நெறியும், தேசபக்தியும் அதிரடி ஸ்டைலும் அவர் இருக்க வேண்டிய இடம் தமிழக பாஜக என தெளிவாக சொல்லும்
தமிழ்நாட்டில் கட்சி வளர்க்கும் ஆசை இருந்தால் பாஜக ராஜேந்திர பாலாஜியினை கட்சிக்கு அழைத்து வரவேண்டும், அதன் பின் இருக்கின்றது அகதளம்
ஆனால் கட்சி வளர்க்கும் ஆசையே அவர்களுக்கு இல்லை என்பதால் இது சாத்தியமில்லை எனினும் அதிமுக என்பது இப்போது பாஜகவின் தமிழக பிரிவு எனும் ஒரு தைரியமும் அவர்களுக்கு இருக்கலாம்
இதனால் ராஜேந்திர பாலாஜி எங்கே இருந்தால் என்ன? எல்லாமே பாஜகதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...