சட்டசபை நிறைவு நாளான நேற்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு, துறைகள் சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை, எம்.எல்.ஏ.,க்களின் உதவியாளர்கள், காரில் அள்ளிச் சென்றனர். சட்டசபை கூட்டத்தொடர், ஏப்., 9 வரை நடப்பதாக இருந்தது. அதன்பின், இம்மாதம், 31 வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.கொரோனா பீதி காரணமாக, நேற்றுடன்சட்டசபை முடிக்கப்பட்டது.நேற்று ஒரே நாளில், 27 துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடத்தப்பட்டது. அனைத்து துறைகளின் சார்பிலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, சூட்கேஸ், டிராவல் பேக், கைக்கடிகாரம், லேப்டாப், முந்திரி பருப்பு, ஆவின் பால் பொருட்கள் என, பல்வேறு விதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.எம்.எல்.ஏ.,க்களின் உதவியாளர்கள், அனைத்து பரிசு பொருட்களையும், ஆட்களை அழைத்து வந்து, காரில் அள்ளிச் சென்றனர்.

No comments:
Post a Comment