Tuesday, March 31, 2020

தற்போதைய நிலையை கேட்டறிந்து தினமும் தகவல் பெறப்படுகிறது.


நாட்டிலேயே
மிக அதிகமான மக்களை வீட்டில் தனிமைப்படுத்தியிருக்கும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது
87425 மக்கள் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விமான நிலையங்கள் மூலம் தமிழகத்திற்குள் வந்திருப்பவர்கள்
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மக்களுக்கு காலையும் மாலையும் சிறப்பு கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மருத்துவக்குழு தொலைப்பேசி மூலம் அழைத்தும் காணொளி மூலம் பேசியும் அவர்களின் தற்போதைய நிலையை கேட்டறிந்து தினமும் தகவல் பெறப்படுகிறது
மேலும் அவர்களின் முகவரிகளை இமிக்ரேசன் அமைச்சகத்திடம் இருந்து பெற்று அவர்கள் வீடுகளுக்கு சென்று
"தனிமைப்படுத்துதல் நோட்டீஸ்" ஒட்டப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள்
தமிழ்நாடு முழுவதும் இந்த பணிகளில்
அரசு மருத்துவர்கள்
செவிலியர்கள்
மருந்தாளுனர்கள்
பள்ளி ஆசிரியர்கள்
வருவாய் துறை பணியாளர்கள்
சுகாதார ஆய்வாளர்கள்
சுகாதார தூய்மைப்பணியாளர்கள்
போன்றோர் ஈடுபட்டுள்ளனர்
மக்களே தேவையன்றி வெளியே வர வேண்டாம்.
வீட்டிலேயே இருங்கள்
இறைவன் நாடினால் நாமே வெற்றியாளர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...