Monday, March 30, 2020

உண்மைஉண்மைஅனைவரும்எளிமையைபழகவும்.

வரும் நாட்களில் உணவு பொருட்கள் முதல், அனைத்து பொருட்களுக்கும் பற்றாக்குறை உருவாகும் சூழல் வரலாம்.
எனவே, அனைத்து மக்களும் வரும் கால சூழலை இப்போதே எதிர்பார்த்து, அனைத்தையும் சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்.
ஒரு தோசைக்கு ரெண்டு சட்னி, சாம்பார் மற்றும் ஒருவேளை மதிய உணவிற்கு, குழம்பு ரசம் தயிர், கூட்டு பொரியல், . . . என வகை வகையாக சேர்த்து தின்பதை தவிர்க்கவும்.
...
ஒரு சோறு, ஒரு குழம்பு என பழகவும். நீங்கள் சாப்பிட்டது போக மீதம் ஆகி கொட்டும் ஒவ்வொரு அரிசியும் அடுத்தவருக்கு உரியது என்பதை மறவாதீர்.
..
இப்போது உள்ள கால கட்டத்தில் ருசிக்காக சாப்பிடுவதை விட பசிக்காக சாப்பிடுகிறோம் என்பதை மறவாதீ்கள். உங்களிடம் பணம் பணம் இருக்கிறது என்பதால் கண்டதையும் வாங்கி குவிக்காதீர்கள். அது சமூக குற்றம் ஆகும்.
..
தேவை இருந்தால்தான் பொருள் விலை உயரும். நம் தேவைகளை குறைத்து கொண்டால் விலையும் நார்மல் ஆகவே இருக்கும். எனக்கு எனக்கு என பரக்காவெட்டி போல பறந்தால், விலையும் வானத்தில் பறக்கும்..
..
எளிமையான உணவுகளை உண்டு, வீட்டிற்கும் நாட்டிற்கும் நம்மால் ஆன பங்களிப்பை கொடுப்போம்.

#காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும்.
காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு
இருக்குதா..???
எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க.
யாராவது கேக்குறாங்களா..???
பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும்
பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம்
கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை...
உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்...
தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்...
இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம்
பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்
வகை வகையா ரசம் வைக்கலாம்
நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம்.
சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ்
னு பெரிய லிஸ்ட்டே போடலாம்
காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும்.
இதுல எதுக்குமே தினசரி கடைக்கு போக தேவையில்லை. ஒருமுறை வாங்கி வைத்தால் போதும்.
சொகுசு வாழ்வை விடுத்து,
குழந்தைகளுக்கு வறுமையை சொல்லித்தர பழகுவோம். நெருக்கடி நேரத்தில் வாழக்கையை சமாளிக்க கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...