Monday, March 9, 2020

தஞ்சை மண்டலத்தில் ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள் இரட்டை இலை கோஷ்டி.

அதிமுக தன் கூட்டணி தர்மத்தின்படி ஜிகே வாசனை மேல்சபை எம்பியா அறிவித்துவிட்டது
ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி வாசனின் கட்சி எனபதல்ல விஷயம், ஒரே ஒரு உறுப்பினர் கொண்ட கட்சி அது என்பதுதான் ஆச்சரியம்
ஆம், அக்கட்சியின் ஒரே ஒரு நபர் ஜி.கே வாசன் மட்டுமே
வாசனை விட பலம் வாய்ந்தவர்கள் நாங்கள் என மல்லுகட்டிய தேமுதிகவுக்கு பதவி வழங்கபடவில்லை மாறாக வாசனுக்கு வழங்கபட்டிருகின்றது
கவனித்தீர்களா? இப்பொழுதெல்லாம் திமுகவின் செல்வாக்கு பகுதியான தஞ்சை திருவாரூர் பக்கம் அதிமுகவினருக்கு தனிபாசம் வந்துவிட்டது
அது பாதுகாக்கபட்ட வேளான் பகுதி என அறிவித்தார்கள், நேற்று பழனிச்சாமி "மணப்பாறை மாடு கட்டி.." என வயலில் இறங்கி நாற்று எல்லாம் நட்டார்
இப்பொழுது வாசனை எம்பி ஆக்குகின்றார்கள், தஞ்சை மண்டலத்தில் ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள் இரட்டை இலை கோஷ்டி.
சரி, தேமுதிக தவிர அதிமுக கூட்டணியில் யார் உண்டு என்றால் பாஜக உண்டு
ஆனால் அவர்களும் எம்பி சீட் கேட்கவில்லை, பழனிச்சாமியும் கொடுக்கவில்லை
அவர்கள் ஏன் கேட்கவில்லை, அட அவர்களுக்கு மாநில தலைவர் அறிவிப்பதிலே சிக்கல் இந்நிலையில் எம்பி சீட் என அறிவித்தால் பதவியாருக்கு என சூலாயுதம் சகிதம் பாய்ந்துவிட மாட்டார்களா?
குதிரைக்கு ஏன் கொம்பு இல்லை என்பதும் சிங்கத்துக்கு ஏன் இறக்கை இல்லை என்பதும் பாஜகவுக்கு ஏன் தமிழ்நாட்டில் பலம் இல்லை என்பதும் எளிதாக உணரும் விஷயங்கள்
பின் எங்கிருந்து இங்கு தாமரை மலரும்? அது தமிழிசை அக்கா வீட்டில் மட்டும்தான் மலரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...