Wednesday, July 22, 2020

1892ல் திருப்பதி கோயிலில் மட்டும் லாக்டவுன்........ நடந்தது என்ன?

திருப்பதி கோயில் கடந்த 1892ம் ஆண்டு இரு நாட்கள் அடைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.
இது குறித்த காரணங்களை திருப்பதி தேவஸ்தான பதிவேடு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது கோயிலை பராமரித்து வந்த மகந்துக்களுக்கும், சுவாமி பூஜை செய்து வந்த ஜீயர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதான் விளைவாக 1892ம் ஆண்டு கோயில் நடை சாற்றப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பால் கோயில் அடைக்கப்பட்டாலும், சுவாமிக்கு நித்திய பூஜைகள் செய்து வருகின்றனர்.
ஆனால் முன்னர் கோயில் அடைக்கப்பட்ட போது பூஜைகளும் நடைபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்சமயம் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யாவிட்டாலும், மக்களின் நலனுக்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை வரை அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதோடு மக்களின் நலனுக்காக கோயில் சார்பாக பல்வேறு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...