Monday, July 13, 2020

தமிழகம் முழுதும் பஸ்கள் ஓடாது! 31ம் தேதி வரை விழுந்தது தடை.

 தமிழகத்தில், நாளை மறுநாள் முதல், பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'வரும், 31ம் தேதி வரை, தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஓடாது' என, அரசு அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில், இனி எந்த தளர்வும் இருக்காது என தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், மார்ச், 24ல் துவங்கிய பொது ஊரடங்கு, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு அவ்வப்போது, சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டங்களிலும், வணிக வளாகங்கள் தவிர, அனைத்து கடைகளையும் திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் தவிர்த்து, பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்திற்கு உள்ளும், அரசு பஸ் போக்குவரத்து நடந்து வந்தது.

நோய் பரவல் அதிகரித்ததும், பஸ் போக்குவரத்தை நிறுத்தும்படி, மருத்துவ நிபுணர் குழு, அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, ஜூலை, 1 முதல், 15 வரை, பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதாக, முதல்வர் அறிவித்தார். நாளையுடன் அந்த தடை நிறைவடையும் நிலையில், 16ம் தேதி முதல், மீண்டும் மாவட்டத்திற்குள், பஸ் போக்குவரத்தை, அரசு அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், மதுரை, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, வேலுார், திருவண்ணாமலை என, பிற மாவட்ட தலைநகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் கூட, நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது.

இந்த சூழ்நிலையில், பஸ் போக்குவரத்தை அனுமதித்தால், நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அரசுக்கு அறிவுறுத்தினர். அதை ஏற்று, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை, தொடர்ந்து கட்டுப்படுத்த, இம்மாதம், 31ம் தேதி வரை, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து சேவை இயக்கப்படாது என, நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இன்று அமைச்சரவை கூட்டம்! தமிழகத்தில், நோய் தடுப்பு, 'நீட்' தேர்வு உள்ளிட்ட, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக, இன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டத்தில், சென்னையை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுப்பது குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு; பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; பள்ளி, கல்லுாரிகள் திறப்பு; கல்விக் கட்டணம் வசூலிப்பு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது, சில அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும், முடிவெடுக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத் து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...