Monday, July 27, 2020

மேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை.

சீனாவில் இருந்து செயல்படும், 59 மொபைல் செயலிகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக, 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250 செயலிகளின் பட்டியலும், தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோதலாக மாறியது. எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

சீனாவைச் சேர்ந்த, மொபைல் செயலிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், தகவல்கள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, 'டிக்டாக்' உட்பட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, மேலும், 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட செயலிகளின் மறுவடிவமாக இருந்தவை. இது குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவற்றைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட செயலிகள் குறித்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், இவற்றுக்கும் தடை விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...