Thursday, July 16, 2020

பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்து திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்கள் சாதனை.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதிக தேர்ச்சியில் முதலிடம் என்ற பெருமை திருப்பூர் மாவட்டத்திற்கு கிடைத்தது. ஈரோடு கோவை மாவட்டங்கள் இரண்டு மூன்றாவது இடங்களை பிடித்தன. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென முடிவை அறிவித்து தேர்வுத்துறை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு மார்ச் 24ல் பொது தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுக்கு எட்டு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் 7.99 லட்சத்து 931 மாணவ மாணவியர் நேரடியாக பள்ளிகள் வழியே தேர்வு எழுதினர்; மற்றவர்கள் தனி தேர்வர்களாக பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று திடீரென வெளியாகின.

மாணவ மாணவியருக்கு அவர்களின் பள்ளிகளில் பதிவு செய்திருந்த அலைபேசி எண்களில் எஸ்.எம்.எஸ்.களாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வுத்துறையின் இணையதளத்திலும் முடிவு வெளியிடப்பட்டது. இதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

2019ல் நடந்த தேர்வில் 91.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2016 முதலான ஐந்து ஆண்டுகளை கணக்கிட்டால் இந்த ஆண்டு தான் அதிகபட்ச தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 2017ல் 92.1 சதவீதம் பெற்ற தேர்ச்சியே இதுவரை அதிக தேர்ச்சியாக இருந்தது.

மெட்ரிக் பள்ளிகள்பள்ளிகள் வாரியான தேர்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளில் 98.7 சதவீத மாணவர்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.30; மாணவ மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில் 92.72 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 85.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவினர் அதிக அளவாக 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியலில் 92.96 கலை பிரிவில் 84.65 மற்றும் தொழிற்கல்வியில் 79.88 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர்.

திருப்பூர் முதலிடம்:
மாவட்ட அளவிலான தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 96.99 சதவீதத்துடன் இரண்டாம் இடம்; கோவை 96.39 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. தேர்வெழுதிய சிறை கைதிகள் 62 பேரில் 50 பேரும் மாற்று திறனாளிகளில் 2835 பேர் பங்கேற்று 2506 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திடீர் அறிவிப்பு ஏன்?
தேர்வு முடிவுகள் ஜூலை 6ல் வெளியாக இருந்தது. பின் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 13ல் வெளியாயின. தமிழக உயர் கல்வித்துறை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையும் நேற்று முன்தினம் திடீரென அறிவிக்கப்பட்டது. எனவே பிளஸ் 2 தேர்வு முடிவை தாமதமின்றி வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து எந்தவித முன் அறிவிப்புமின்றி நேற்று காலையில் திடீரென தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டன.

மார்ச் 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காத 780 மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத ஒப்புதல் அளித்தனர். அவர்களுக்கான தேர்வு வரும் 27 ல் நடக்க உள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கான முடிவுகளை ஆக. 1ல் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் உயர்கல்வி துறையின் இன்ஜினியரிங் சேர்க்கை அறிவிப்பால் வேறு வழியின்றி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னறிவிப்பு இன்றி ராணுவ ரகசியம் போல் வைத்திருந்து திடீரென முடிவுகளை வெளியிட்டது தேர்வுத்துறையின் குழப்பத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. மாணவர்கள் எந்த இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க வேண்டும் என்பதில் திணறினர். அலைபேசிகளிலும் பலருக்கு எஸ்.எம்.எஸ். கிடைக்கவில்லை; இணையதளமும் நீண்ட நேரம் இழுத்தது.

அமைச்சருக்கே அதிர்ச்சி:
தேர்வுத் துறை இயக்குனரகம் சார்பில் நேற்று பத்திரிகை செய்தி குறிப்புகள் அனுப்ப கூட திட்டமிடவில்லை. பள்ளி கல்வி செயலகமே நேரடியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையை பயன்படுத்தி பத்திரிகை அறிவிப்புகளை வெளியிட்டது.

பள்ளி கல்வி அமைச்சருக்கே தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து தேவையான நேரத்தில் முன் அறிவிப்பு வரவில்லை. அதேபோன்று காலையில் அவசரமாக வெளியிட்ட அறிவிப்பில் பிளஸ் 1 தேர்வு முடிவும் வருவதாக கூறி விட்டு அந்த முடிவை வெளியிடவில்லை. அதனால் மாணவர்கள் நேற்று மாலை வரை கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசி முன் காத்திருந்து களைப்புக்கு ஆளாகினர்.

அதிக தேர்ச்சி யார்?
மாணவர்களை விட மாணவியர் 5.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மகளிர் பள்ளிகளில் 94.81 சதவீதம்; ஆடவர் பள்ளிகளில் 83.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரத்தில் மாணவர்களில் 6.09 சதவீதம் பேர்; மாணவியரில் 5.19 சதவீதம் பேர் தேர்ச்சி மதிப்பெண் பெறவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...