Saturday, July 25, 2020

செய்தித்தாள் மற்றும் டிவி செய்தி துறைகள் துல்லியமாக செயல்ப் படவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு டிரோன்பிரதாப் என்ற இளைஞனைப் பற்றி வைரலாக செய்திகள் பரவ ஆரம்பித்தது.
இங்கு பலரும் பகிர்ந்தார் .. வாட்ஸ் அப்பில் வந்தது அதை படித்து நம்ப முடியாத இருந்த நிலையிலும் எல்லோருக்குமே...
அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அளவுக்கு அந்த இளைஞன் பற்றி எழுதியிருந்த கதை நம் மனதில் இடம் பிடித்து விட்டது.
அதை படித்தவுடன் நானும் இந்தியன் எக்ஸ்பிரஸ் டெக்கான் ஹெரால்ட் ஆகியவற்றில் உண்மையிலேயே இவற்றைப் பற்றி எழுதப்பட்டு உள்ளனவா என்று பார்த்தேன்.
அது எழுதப்பட்டு இருந்தது .
பிறகு யூடியூபில் போய் அவர் கன்னட நாட்டில் பிறந்து இருந்ததால் அங்கிருந்த செய்தி ஊடகங்களில் இருந்த செய்திகளை பார்த்தேன் .
பிறகு ஒரு டிப்ளமா கல்லூரியில் அவர் உரையாற்றி இருந்ததை யாரோ அப்லோட் செய்து இருந்தார்கள் அதில் ஒரு கமெண்ட் போட்டேன்.
பாராட்டி போட்டிருந்த அந்த கமெண்டில் என்னுடைய தயக்கத்தையும், ஏன் அத்தகைய சாதனை படைத்த ஒரு இளைஞனை ஆங்கில செய்தி ஊடகங்கள் மற்றும் ஐஐடி அழைக்கவில்லை என்று கருத்தூட்டம் விட்டேன் .
அச்சமில்லாமல் வெளியிட்டு இருந்தேன்.
ஓரிரு நாட்களில் அந்த பக்கம் போய் பார்த்தால் ...பல பேரும் இது பொய்யான செய்தி என்று போட்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் நிரூபியுங்கள் என்று கேட்டேன்.
பிறகு ஒரு சில பேர் எடுத்த முயற்சியினால் டிரோன் பிரதாப் வாங்கியதாக சொல்லி கொண்ட அவார்டை யாரிடம் காட்ட வில்லை... எந்த ஒரு ஊடகமும் அந்த அத்தாட்சி சர்டிபிகேட் மெட்டல்ஸ் அவற்றை நேரடியாக பார்க்காமலேயே பிரதாப்பின் வாக்குமூலத்தை நம்பி பிரசுரம் செய்து இருக்கிறார்கள்!!!!!
இது ஒருபுறம் போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இப்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நிஜமான ரியாலிட்டி ஷோ திராவிட &தி.க ஷோ..
இதைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்.
விஜய் டிவியில் உலகப்புகழ்பெற்ற தமிழ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெறும் நபர்கள் சிறு சிறு தவறு செய்து விடுவார்கள்.
அதாவது ஒரு அஞ்சு முட்டைகளை திருடி சாப்பிட்டுவிட்டு சாப்பிடவில்லை என்பார்கள்!! அதை பெரிதளவில் பூதாகரமாக கொலை குற்றத்திற்கும் மேலாக சித்தரித்து...பிக் பாஸ் கமல் தலைமையில் பஞ்சாயத்து வைத்து ....உலகமெல்லாம் ஓட்டு போடுங்கள் என்று சொல்லி அத்தனை மக்களும் அதை பற்றிய பதிவுகள் எழுதிக்கொண்டு வீடியோக்கள் போட்டுக்கொண்டு இப்படி எல்லாம் செய்கிறோம் !!???
ஆனால் அதே பிக்பாஸ் ஷோ வில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்..
"தவறு செய்பவர்களை தட்டிக் கேளுங்கள்..
நியாயம் நேர்மை இவைதான் நம் எதிர்காலம்..
நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்"
என்றெல்லாம் பிரசங்கம் செய்யும் கமல் ..
சமூகநீதி சமநீதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு..
அதற்காகவே தான் அரசியல் வந்திருப்பதாக பேசிக்கொண்டு...
அவருக்கு பிடித்த தலைவர் பெரியார் என்பதால் ...
அவரை தேவையில்லாது பொய்கள் சொல்லி வரலாற்றை திரித்தவர்கள் ..."ஏன் அப்படி செய்தார்கள்?" என்று கேள்வி கூட கேட்காமல் நரித்தனமாக ஒதுங்கி இருப்பது என்ன விதமான அரசியல்???
இப்படி இருப்பவர்களை எப்படி அரசியலில் நம்பி நாம் ஆதரவு கொடுப்பது ??
அரசியலில் புது நபர்கள் வரவேண்டியது தான்?!!!
நிச்சயமாக கமல் தைரியசாலியாக தட்டிக் கேட்பார் எனில் அவரை நாம் வரவேற்கலாம்.....
ஆனால் இதுவரை எத்தனையோ பேர் சொல்லியும் பிக்பாஸ் கால் காதில் இச்செய்தி எட்டவில்லையா??
இல்லை அவரும் இந்த பொய்யை பரப்பினாரா??
அதனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறாரா ??
பிக்பாஸ் கமல் பதில் சொல்வாரா???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...