Friday, July 10, 2020

கேரளாவை அதிர வைத்துள்ள ஸ்வப்னா சுரேஷ்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..!

கேரள அரசை அதிர வைத்துள்ள தங்கக்கடத்தலில் முதல்வர் அலுவலகம் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், இதன் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு வருபவர் ஸ்வப்னா சுரேஷ்.
36 வயதாகும் இவர், அபுதாபியில் பிறந்தவர்.
திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.
2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை குவைத், சவுதி விமான நிலையங்களில் பயணியர் சேவைப் பிரிவிலும், அபுதாபியில் உள்ள ஐக்கிய அமீரக இந்திய தூதரகத்திலும் பணியாற்றியவர்.
கருத்து வேறுபாட்டால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஸ்வப்னாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
குழந்தைகளுடன் ஊர் திரும்பிய ஸ்வப்னா 2012 முதல் 2014ம் ஆண்டு வரை திருவனந்தபுரத்தில் மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார்...
பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செயல் அலுவலர் பணியில் சேர்ந்த ஸ்வப்னா, அதிகாரி ஒருவர் மீது பொய்யாக பாலியல் துன்புறுத்தல் புகார் தந்தது தெரியவந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், திருவனந்தபுரம் ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணியில் சேர்ந்தார்.
அங்குதான் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித்குமாருடன் பழக்கம் ஏற்படுகிறது.
இவர்களின் திருமணத்தை மீறிய உறவால் பிரச்னைகள் வெடிக்க, இருவரும் தூதரகப் பணியில் இருந்து தாங்களாகவே விலகுகின்றனர்.
தொடர்ந்து கேரள அரசில் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத்துறையின் இன்ஃப்ராஸ்டரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்த ஸ்வப்னா, அதிகாரிகள் தொடர்பால் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
2019ம் ஆண்டு செப்டம்பரில் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையின் கேரள அரசு செயலாளர் சிவசங்கர் ஸ்வப்னாவின் வீட்டிற்கே வந்து செல்லும் அளவிற்கு பழகியுள்ளார். ஸ்வப்னாவிற்கு மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்பட்டதாக சுங்கத்துறை விசாரணையில் தெரிவந்துள்ளது. ஏற்கனவே அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அலுவலத்தில் பணியாற்றியது, திருவனந்தபுத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணியாற்றியது, வெளிநாடு மற்றும் இந்திய விமான நிலையங்களில் பணிபுரிந்தது ஆகிய முன் அனுபவம் மற்றும் அப்போதைய பழக்கங்களால் தங்கக்கடத்தலை எளிதாக செய்திருக்கிறார் என்கிறது சுங்கத்துறை.
இதற்காக போலி ஆவணங்கள் தயாரித்ததும், ஐக்கிய அமீரகத்தின் தற்போதைய பணியாளர்களை மகிழ்விக்க பல்வேறு நடவடிக்கைகளை ஸ்வப்னா எடுத்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னாவை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தன்மீது எந்த தவறுமில்லை. தனக்கு முன் ஜாமீன் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...