Sunday, July 26, 2020

கருப்பர் கூட்டத்திற்கு நிதி தந்தது யார்? செந்தில்வாசனிடம் தீவிர விசாரணை.

கருப்பர் கூட்டம் சேனலுக்கு நிதி அளித்து வந்தவர்கள் யார் என்பது குறித்து செந்தில்வாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் ஹிந்துக்களின் மனம் புண்படும்படியான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இது தொடர்பான புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் 49; போரூர் சுரேந்திரன் நடராஜன் 36 உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம், விசாரணை

சேனலின் நிதி சார்ந்த விஷயங்களை செந்தில்வாசன் தான் கையாண்டுள்ளார். இவர் வாயிலாகவே சேனலுக்கு நிதி வந்துள்ளது.சேனலுக்கு பணம் எங்கிருந்து வந்தது யாரிடம் இருந்து வந்தது என்பது குறித்து செந்தில்வாசன் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளிக்கிறார். ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள் நிதி அளித்து வந்துள்ளன. அவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க மறுக்கிறார்.

செந்தில்வாசன் அவரது கூட்டாளி சுரேந்திரன் நடராஜன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இவர்களின் சதி திட்டம் தெரியவரும் என காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...