Tuesday, July 21, 2020

பெரியவர்கள் சொல்லும்போது கேட்பதற்கு ஆர்வமாக இருக்கும்.

"மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும். மதுரம்மா என்கிட்ட "நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க.
உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கான்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பித்தார்கள்.
என்னோட திரை வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் என்றால் சிவாஜிகணேசன். என்னுடைய பால்ய நண்பன், ஒரு வகையில் அவனை நடிக்கக் கூப்பிட்டது நான் தான் என்பதால், என் மீது அவனுக்கு அளவு கடந்த பாசம். உயிரோடு இருந்தவரை என்னை வந்து அடிக்கடி பார்த்துட்டு போவான். இன்னொருவர் என்.எஸ்.கே. மற்றவர்களுக்கு உதவி செய்தே அழிந்து போனார். அடுத்து அவரை போல அடுத்தவர்களுக்கு வாரி வழங்கியது எம்.ஜி.ஆர். அவரை பற்றி சொல்லணும்ன்னா, ஒழுக்கம், நடத்தை, குணத்துல அவ்வளவு அருமையான மனிதர்.
உதாரணமா "தாய்க்குப் பின் தாரம்' படத்தில் ஒரு வரப்பு தகராறு சீன் இருக்கும். அதில் என் எதிராளியா இருந்தவன் அடிக்கிறா மாதிரி நடிக்காம என்னை நிஜமாகவே அடிக்க ஆரம்பிச்சுட்டான். அப்போ ஷூட்டிங் பார்த்துகிட்ட இருந்த எம்.ஜி. ஆர். அதை கவனித்துவிட்டார். அந்த ஆளைப் பார்த்து "ஏன்யா ராதா மேல ஏதாவது கோவமா? நிஜமாவே அடிக்குறியேன்னு' கோபமா சொல்லி ஷூட்டிங்கைக் கேன்சல் பண்ணிட்டார்.
அதன் பிறகு என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்லி செக்கப் பண்ண வைத்தார். யாராவது சம்பளம் கம்மியா வாங்குவது தெரிந்தால், உடனே கம்பெனிக்குத் தெரியாமல் அவர் பாக்கெட்டில இருந்து பணம் எடுத்து கொடுப்பார். எல்லாரும் நடிக்கத்தான் வர்றான், காசு வாங்கத்தான் வர்றான். அவருக்கு மட்டும் ஏன் அக்கறை? அதுதான் மனிதாபிமானம்.
அப்போ சிவாஜி கணேசனோடு நானும் வேட்டைக்குப் போவேன். வெர்ஸ்ட் ஜெர்மன் மேக்ல ஒரு துப்பாக்கி வெச்சிருந்தேன். "தாய்க்குப் பின் தாரம்' படத்தில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால சுடுவது போல ஒரு சீன் இருக்கும். அந்தத் துப்பாக்கி என்னோடதுதான். இப்பவும் பத்திரமாக வெச்சிருக்கிறேன்.
அப்போ ஆயிரக்கணக்கில் எல்லாம் சம்பளம் இல்லை. "மனோகரா' படம் மூணு மொழியில வெளியாச்சு. அதற்கு எனக்கு மொத்த சம்பளமே மூவாயிரம்தான். "
- மறைந்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...