Friday, July 10, 2020

நெடுஞ்செழியனுக்கு சிலை.

'நெடுஞ்செழியனுக்கு சிலை வைக்கப்படுவதுடன், அவரது பிறந்த நாள், அரசு விழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவர், தமிழக அரசில் நீண்ட காலமாக அமைச்சராக பணியாற்றியவர், நெடுஞ்செழியன்.நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில், 1920 ஜூலை, 11ல் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில், முதுகலை பட்டம் பெற்றவர்.எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுனர், சிறந்த சொற்பொழிவாளர் என, பன்முகத்தன்மை கொண்டவர்.

அண்ணாதுரை அமைச்சரவையில், கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையில், நிதித் துறை அமைச்சராக இருந்தார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் மறைந்தபோது, இடைக்கால முதல்வராக பதவி வகித்தார்.அவரை சிறப்பிக்கும் வகையில், சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், தமிழக அரசு சார்பில், முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்படும்.அவரது பிறந்த நாளான, ஜூலை, 11, அரசு விழாவாக, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்.அவரது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, அவர் எழுதிய, 'வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்' என்ற நுாலை அரசுடைமையாக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...