Friday, July 10, 2020

திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பணிமாற்றத்தைக் கண்டித்து மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களின் கண்டன அறிக்கை...

















Image may contain: 1 person, sitting












*அதிர்ச்சியில் வாழும் தமிழ்நாடு மக்களுக்கு மனித உரிமை ஆர்வலர்களின் வேண்டுகோள்!*
*“நம்மிடம் நியாயம் இருக்கிறது.நேர்மை இருக்கிறது.நாம் ஏன் தயங்கவேண்டும். நமது மாண்பினை மீட்டெடுக்க?!கற்பியுங்கள்! எழுச்சி கொள்ளுங்கள்!! ஒன்றுபடுங்கள்!!”-மாமனிதர் அம்பேத்கர்*
தமிழ்நாடு அரசியல் சீரழிந்து சீழ்வடியும் நிலைக்கு வந்துள்ளது. அரசியல் விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை.
கொஞ்சம் கூட கூச்சமோ தயக்கமோ இல்லாத அரசியல் முகமூடிகள் இந்திய அரசியல் சட்டத்தை நாசப்படுத்தி ஆடுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் காவல்துறையில் பணியாற்றும் ஒரு பிரிவினர் அதிர்ச்சியூட்டும் கொடுமைகளை காட்டுமிராண்டித் தனமாக செயல் படுத்துகிறார்கள்.
ஆளும் அரசியல்வாதிகள் வருகிற தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இரவு பகலாக போட்டிபோட்டுக்கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள்.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பாசன நிலங்களை காவிரியின் புதிய பாசன பகுதிகளாக அவசர அவசரமாக விரிவுபடுத்துகிறார்கள்.
சட்டவிரோதமாக திட்டம்போட்டு ஆற்றின் அருகில் கிணறுகளைத் தோண்டி ஆற்றிலிருந்து நீர் எடுத்து கிணற்றில் நிரப்பி ராட்சஷ மின் மோட்டார்களை போட்டு 24 மணி நேரமும் ஏராளமான நீரை உறிஞ்சி விடுகிறார்கள்.
பெரிய குழாய்கள் மூலம் 50 கிலோ மீட்டருக்கும் குறையாத தூரத்திற்கு கொண்டு சென்று நிலமுள்ள விவசாயிகளிடம் பொய்யைச் சொல்லி ஒரு ஏக்கருக்கு ரூபாய் 12 லட்சம் முதல் 15 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து நீரை பாசனத்திற்கு விற்பனை செய்கிறார்கள். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாகும்.
இதனால் பரம்பரை பாசன பகுதியான திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகளுக்கு போய் சேர வேண்டிய நீரின் அளவு மிகமிகக் குறைந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் குடிநீருக்கே கூட இப்பகுதிகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சப்தமில்லாத குரல் எழுப்பப்படுகிறது. இதுதான் ஆரம்பம்.
இனி நியாயம் சார்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை கடுமையாக காட்ட இருக்கிறார்கள்.
(03.07.2020 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் – காவிரி நீர் திருட்டில் கொள்ளையோ கொள்ளை..! பக்கம்-20) இதற்கு அரசாணை வெளியிடப்பட்டாலும் அதுவும் சட்டவிரோதமாகும்.
இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பவாதிகள் விவசாயிகளை பயன்படுத்தி திருச்சி தஞ்சை போன்ற பகுதி விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார்கள்..
இதை விரைவில் தடுக்கும் சக்தியாக நாம் முன்கை எடுப்போம்
சாத்தான்குளம் காவல் நிலைய காட்டுமிராண்டித்தன கொலைவெறியின் வெளிப்பாட்டை உலகமே பார்த்து திகைத்து நிற்கிறது. இதிலும் முதலமைச்சரின் அறிவுகெட்ட அணுகுமுறை அம்பலப்பட்டிருக்கிறது.
கொரானா என்ற ஆபத்தான நோய்க்கிருமிகளின் அட்டூழியம் ஒரு பக்கம் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைவிட கொடூரம் இந்த ஆளும் கட்சியினரின் அராஜகம், அடாவடித்தனம் சொத்து சேர்ப்பதில் புதிய புதிய அணுகு முறைகளை கையாண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே விழுங்கிவிடும் ராட்சஸ விலங்குகளாக ஆளுங்கட்சியினர் அமைத்திருக்கிறார்கள். பொய்வழக்கு, காவல்துறையினரை ஏவி விடல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் நியாயம் கேட்டு போராடும் மக்களை குறிவைக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டை நாசம் செய்யும் வகையிலேயே இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்துள்ள கற்பனைக்கு எட்டாத காட்டுமிராண்டித்தன தாக்குதலால் தந்தை மகன் என இருவர் கொடூரமாக கொல்லப்பட்துள்ளனர். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திகைப்பூட்டும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
காவல்த்துறையில் நேர்மையாக தியாக உணர்வோடு சட்ட ரீதியாக செயல்பட பணியில் இருப்போரை இன்றைய நாற்றமெடுத்த அரசியல் அனுமதிப்பதில்லை. படிப்படியாக பணியிலிருக்கும் காவல்த்துறையினர் பலர் ஊழல்வாதிகளாகவும் ஆளுங்கட்சியினரின் அடியாட்களாகவும் வெறிபிடித்த வேட்டையர்கலாகவும் சமூகத்தை சூறையாடுகின்றார்கள்.
நீதித்துறையில் மூன்றில் ஒருபகுதிக்கு குறையாத அளவில் சாதியர்களாக குறிப்பாக தலித் மக்களுக்கு எதிரியர்களாக தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் தலித் சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகளும் விதிவிலக்கல்ல. இந்த பின்னணியில் காவல்த்துறையில் நடக்கும் காட்டுமிராண்டி செயல்களை தடுக்கவோ சீர்த்திருத்தவோ முயற்சிகள் நடந்தபாடில்லை.
நீதித்துறை அரசியல் சட்டத்திற்குபட்டு செயல்படாத சூழலில் அதையும் சீர்செய்ய வேண்டியுள்ளது. எனவேதான் கொடுமைக்காரர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் வெளிப்பாடாக சமீபத்தில் காவல்த்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளையும் குறிவைத்தே இந்த இடமாற்றம் நடந்துள்ளது.
இதில் குறிப்பாக திருச்சிராப்பள்ளி சரக காவல்த்துறை துணை இயக்குனர் (டி.ஐ.ஜி) திரு. பாலக்கிருஷ்ணன் திருச்சியில் பணியேற்ற ஓராண்டு முடியும் முன்பே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மணல் கொள்ளை மாபியா கும்பலை விரட்டி விரட்டி பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்துவந்தார். வேறுவிதமான சட்ட மீறல்களில் ஈடுபடுவோரை கடுமையாக நடவடிக்கை எடுத்து மக்களிடம் நற்பெயர் பெற்றுவந்தார். இதனால் ஆத்திரடைந்த அரசியல் மாபியாக்கள் இவரையும் சேர்த்து இடமாற்றம் செய்துள்ளார்கள். இந்த இடமாற்றத்தின் பின்னணி மிகப்பல அதிர்ச்சி தரும் மோசடித்தனமான அதிகார அத்துமீறலை அம்பலப்படுத்துகிறது.
நாம் வெறும் அறைகளுக்குள் இவற்றை பேசி சோர்வடையக் கூடாது. ஆக்கபூர்வமாக அரசியல் மாபியாக்களை மக்கள் சக்தியின் இரும்புக்கரம் கொண்டு அடக்கியாக வேண்டும். இதனை எவ்வித சட்ட மீறலும் இல்லாமல் சாதிக்க வேண்டும். தமிழ்நாடெங்கும் கடும் கண்டன நிகழ்ச்சிகளை நடத்தி நேர்மையான அதிகாரிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
தூத்துக்குடி , பொள்ளாச்சி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினரில் ஒரு பிரிவினர் நடந்து கொண்டுள்ள காட்டுமிராண்டி போக்கை தமிழ்நாடு மக்கள் உணர்ந்திருந்தாலும், இந்த தீயவர்கள் கூட்டத்தை விரட்ட முடியாமல் தடுமாறுகிறார்கள். எனவேதான் இந்த வேண்டுகோள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்து உள்ள நாம் சட்டரீதியான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் புதிய சூழலை உருவாக்க முடியும். நமக்குள் கட்சி , சாதி, மதம், வாழ்விடம் போன்றவற்றால் பிளவுபடுத்தபட்ட சூழலில், இவற்றை ஓரங்கட்டிவிட்டு சமத்துவ உணர்வை வளர்க்கும் வேலைத் திட்டத்தோடு நாம் செயல்பட வேண்டும். அதற்காக நம்மை தயாரிப்போம். திட்டமிடுவோம். செயல்படுவோம். புதிய சூழலை கட்டமைப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...