Thursday, July 9, 2020

மின்சாரக் கட்டணத்தில் குளறுபடி...

அரசு மக்கள் வயிற்றில் அடிக்கிறதென எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினால்..
மின்சாரத்துறை அமைச்சர் எதிர்கட்சிகள் பொய்யான தகவலை வெளியிடுகிறார்கள் என்றும் அரசியல் செய்கிறதே அவர்களை வேலை என்று அபத்தமாக அறிக்கை விடுகிறார்..
முன்னிருமாதங்களின் கட்டணத்தொகையைத்தான் பின்னிரு மாதங்களுக்கு செலுத்தினாலே போதுமென அறிவுறுத்தியிருக்கிறோம் என்கிறார் அமைச்சர்...
அதிலும் குளறுபடி தான்....
லாக்டவுன் காலத்தில் சொந்த ஊருக்கு சென்றவர்கள்...
பூட்டிய விளக்குக்கூட போடாத வீட்டிற்கும்...
பல வியாபாரிகள் பூட்டிய கடைக்கும் முன்னிருமாதங்களுக்கு செலுத்திய தொகையை மீண்டும் செலுத்துவதால்
அரசுக்கு கொள்ளை லாபம்...
இன்னொரு பக்கம் வீட்டிலே முடங்கியதால் அதிக மின்சார பயன்பாடு இருந்ததால் முன்னிருமாதத் தொகையை பின்னிருமாதத்திற்கு செலுத்துவது சாதமானது என்று நினைத்தவர்கள் தலையில் இப்பொழுது இடி...
அதாவது தற்போது தளர்வுகள் நீங்கி மின்சார கணக்கீட்டாளர்கள் கணக்கெடுத்து சொல்லும் தொகை சராசரியாக 500" ரூபாய் செலுத்தியவர்களுக்கு 5000"ம் வருகிறது
ஏன்! என்றால் நான்கு மாத ரீடிங்கையும் ஒன்றாக கணக்கிட்டு
யூனிட்கள் அதிகமாக அதிகமாக அதற்கு ஏற்ப யூனிட் ஒன்றின் தொகையும் கூடி
இருமாதங்களாக பிரித்து குறைய வேண்டிய ஒரு யூனிட்டின் விலை... நான்குமாதத்தையும் ஒன்றாக சேர்த்து நான்குமடங்கு மின்சாரக்கட்டணத்தை கட்டச்சொல்லி கொள்ளையடிக்கிறது அரசு...
மேலும் முன்னிருமாத தொகையை பின்னிருமாதங்களுக்கு செலுத்தியவர்கள் மீண்டும் கணக்கெடுத்து கூடுதல் தொகையை அடுத்தமுறை செலுத்தவேண்டும் என்பதால் அடுத்த தவனையிலும் இதே கொள்ளை நீடிக்கவிருக்கிறது
கொரோனா காலத்தில் சாமானியன் முதல் நடுத்தர மக்கள் வரை வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் போது அத்தியாவசிய மின்சாரத்தில் கொள்ளையடிப்பது எந்தவகையில் நியாமென... கேட்கும்
மக்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும்
அரிசி கொடுத்துள்ளோம் என்கிறது மத்தியரசு
ஆயிரம் ரூபாய் தந்துள்ளோம் என்கிறது மாநிலரசு திரும்பத் திரும்ப....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...