1980 வரை இந்தியாவில் பெரும் குண்டுவெடிப்புகள் இல்லை, ஆப்கனில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு அங்கு தீவிரவாத கும்பல் கொரோனா கிருமிபோல் உற்பத்தியான பின் காட்சிகள் மாறின
தீவிரவாதிகள் என்பவர்கள் குட்டி சாத்தான்கள், அவர்களுக்கு வேலை கொடுக்காவிட்டால் எஜமானரையே ஒழித்துவிடும் அளவு கடுமையானவர்கள்
பாகிஸ்தான் ஆப்கனில் தாங்கள் நினைத்தது அல்லது அமெரிக்கா நினைத்ததை சாதித்தபின் அவைகளை இந்தியா மேல் ஏவிவிட்டன, மிகபெரிய குண்டு வெடிப்புகள் அதன் பின்பே அரங்கேறின
1990க்கு பின் அவை இன்னும் கடுமையானது, ராமர்கோவில் விவகாரத்தில் குழம்பியிருந்த இந்தியாவில் மிக பெரிய குழப்பத்தை அவர்களால் விளைவிக்க முடிந்தது
காஷ்மீரில் என்னவெல்லாமோ நடந்தது, இந்துக்கள் அகதிகளாய் விரட்டபடும் அளவு நிலமை மோசமானது, எங்கு திரும்பினும் குண்டுவெடிப்பு, கடத்தல்,மோதல் எல்லாம் வழமையாயின, காஷ்மீர் சீரழிந்தது
தீவிரவாதிகளின் குறி இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பை மேல் விழுந்தது 1990களில் இருந்து சிறிதும் பெரிதுமாக ஏகபட்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்தது
தாவுத் கோஷ்டி, ஹசாப் கோஷ்டி என யாரெல்லாமோ சும்மா டூர் வந்து ஓலைவெடி வெடிப்பது வெடிப்பது போல் வெடித்தார்கள்
கார்கிலில் குடிசை போட்டார்கள், இன்னும் எங்கெல்லாமோ வந்தார்கள், சந்தடி சாக்கில் கோவையிலும் கொடூரங்கள் அரங்கேறின
ஏன் பாராளுமன்றத்தில் வந்து சுட்டார்கள்
அதில் இந்த ஜூலை 11/ 2006 தாக்குதலும் ஒன்று, மக்கள் கூடும் ரயில் நிலையங்களில் அந்த தாக்குதல் நிகழ்ந்தது
அதுவும் மக்கள் மிக பரபரப்பாக இயங்கும் மாலை வேளையில் கூட்டம் நிரம்பியிருக்கும் பொழுது அந்த பாதகத்தை செய்தார்கள்
7 இடங்களில் வெடித்த குண்டுகளில் 200 பேருக்கு மேல் கொல்லபட்டனர், சுமார் 500 பேர் பலத்த காயம் அடைந்தனர்
காங்கிரஸ் கூட்டணி அரசு வெறும் மிரட்டல் விட்டதோடு சரி, ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்
அந்த தைரியத்தில்தான் 2008ல் உள்ளே வந்து சுட்டது கசாப் கோஷ்டி, அது ஆப்கானிய குழு
அதற்கும் காங்கிரஸ் அரசு என்ன முடிவு கண்டது என்றால் ஒன்றுமில்லை, ஆங்காங்கே குண்டுவெடிப்புகள் தொடர்ந்தன, காங்கிரஸ் அரசு பொருளாதார கொள்கை என பணத்தை மட்டும் எண்ணிகொண்டிருந்தது
2014ல் மோடி வந்தபின் மிக துணிச்சலாக இதற்கு முடிவுகட்டினார், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலபடுத்தபட்டன, என்.ஐ.ஏ போன்ற அதிகாரமிக்க அமைப்புகள் ஏற்படுத்தபட்டு அஜித்தோவல் போன்றோர் களமிறக்கபட்டனர்
விளைவு பொதுமக்கள் மேல் ஒரு பொட்டுவெடியினை கூட தீவிரவாதிகளால் வீசமுடியவில்லை
அந்த வெறுப்பில் இந்திய ராணுவம் மேல் தாக்கினார்கள், எல்லை தாண்டி பாகிஸ்தானில் நுழைந்து குண்டு வீசி பதிலுக்கு தாக்க வந்த அவர்களின் எப் 16 விமானத்தையும் வீழ்த்தி அச்சுறுத்தியது இந்தியா
அதன் பின் எந்த அச்சுறுத்தலுமின்றி தேசம் மிக அமைதியாக இயங்கிகொண்டிருக்கின்றது, மோடி அரசு இந்த சாதனையினை செய்தது, செய்து கொண்டிருக்கின்றது
எத்தனையோ தாக்குதல்கள் இங்கு முறியடிக்கபட்டன, அல் கய்தா ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் இலங்கை வழியாக ஊடுருவி, மாலத்தீவு லட்சத்தீவு வழியாக ஊடுருவி இங்கு தாக்க நினைத்தவை எல்லாம் முறியடிக்கபட்டன
இன்று மும்பை ரயில் நிலைய தாக்குதல் நினைவு நாள், அன்று இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்..! 

அதே நேரம் இப்பொழுதெல்லாம் அப்படிபட்ட தாக்குதல்களை முறியடித்து மக்க்களை காக்கும் #மோடி_அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள், அவரின் காவல் இன்னும் தொடரட்டும், தேசம் அமைதியில் செழிக்கட்டும்...! 



#மோடிஜீ_அரசு...! 

No comments:
Post a Comment