Sunday, July 18, 2021

வரலாற்றில்_இன்று..

 ஜூலை 18, 1993 பகல் 9.15 மணி. #புரட்சித்தலைவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய #இதயதெய்வம் #அம்மா சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து #உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிவிட்டார்...

யாரிடமும் 'தான் இப்படி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்று கூறாமல் போராட்டத்தை துவங்கினர் .....
மெரினாவில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருப்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடற்கரைக்கு ஓடோடி வந்தனர்.
அம்மா அவர்கள் கொளுத்தும் வெயிலில், வெறும் தரையில் அமர்ந்திருந்த காட்சியை கண்ட கட்சியினர், அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்..
உடனே சுதாரித்துக் கொண்டு பந்தல், மேடை அமைக்கும் பணியினை மேற்க்கொண்டனர் ....
தனது முதல்வர் பணியை உண்ணாவிரதப் போராட்ட பந்தலில் இருந்தவாறே செய்து வந்தார் மாண்புமிகு #புரட்சித்தலைவி_அம்மா அவர்கள்...
கோப்புகள் பார்ப்பதும், அரசு அதிகாரிகளை சந்திப்பதும் என அரசு மெரீனா கடற்கரையில் ஓரிரு நாட்கள் இயங்கின...
புதுச்சேரியில் இருந்த #ஆளுனர் சென்னா ரெட்டிக்கு தகவல் சென்றதும் அறக்க பறக்க உடனே சென்னை கிளம்பி வந்தார்...
மெரினாவில் #அம்மா அவர்களை நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிய ஆளுனர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார்...
ஆனால், "தமிழகத்திற்குக் காவிரி நதிநீர் வரும்வரை நான் உண்ணாவிரதம் கைவிட மாட்டேன்" என்று விடாப்படியாக கூறிவிட்டார் அம்மா அவர்கள்...
ஜூலை 20 ஆம் தேதி‌, #மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது அம்மாவின் உண்ணாவிரத போராட்டம்.
அவரது உடல் நலத்தை கண்காணித்து வந்த மருத்துவர்கள் அவரது உடல் நிலை மோசமடைவதை கண்டு அதிர்சியடைந்தனர்..
தமிழகம் முழுவதும் ஒரே பதட்டமான சூழ் நிலை அதிகரித்து..
மத்திய உளவு அமைப்புகளின் தகவல்களை கேட்டறிந்த பிரதமர் நரசிம்மராவ் அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்..
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சி.சுக்லா அவர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்..
இந்நிலையில் நான்காவது நாளான ஜூலை 21ஆம் தேதியும் அம்மா அவர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்தது...
முதலில் கர்நாடக முதல் அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்துப் பேசிய பிறகு, அடுத்த நாள் சென்னை வந்து அம்மா அவர்களை சந்தித்த வி.சி.சுக்லா .......
"காவிரி நீர்ப் பங்கீடு சார்பாக இரண்டு கமிட்டிகள் அமைத்து சரியான முடிவு எடுக்க, நீர்ப் பங்கீடு கண்காணிக்கப்படும்" எனக் கூறி உறுதி அளிக்கிறார் .....
மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் உறுதியை ஏற்று அன்று மாலை உண்ணாவிரதத்தை பழச்சாறு அருந்தி கைவிட்டார் அம்மா ......
இந்த வெற்றியின் காரணமாக அம்மா அவர்களுக்குப் பாராட்டு விழா ஒன்று நடத்தி அதில், அவருக்கு #காவிரித்_தாய் என்ற புகழாராம் சூட்டி மகிழ்ந்தார்கள் தமிழக வேளாண் குடி மக்கள்...
May be an image of 1 person and bedroom

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...