சென்னை எல் ஐ சி யிலிருந்து தாம்பரம் வருவதற்கு 18 A கூடுவாஞ்சேரி பஸ்ஸில் பயணிக்கிறேன்.....
இந்த தூரத்தை கடப்பதற்குள் திமுக கொடி கட்டிய 140 சொகுசுகார்கள் அதிமுக கொடிகட்டிய
8 பிஜேபி கொடிகட்டிய 4 காங்கிரஸ் கொடி கட்டிய 2 வண்டிகளை பார்த்தேன்...
ஆறு ஆம்புலன்ஸ்கள்
கடந்து போனது...
ஏகதேசம் 90 சதவிகித ஆட்டோக்களில்
அப்பா முதல்வர் ஸ்டாலினோ
அல்லது அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் உதயநிதியோ
முன்னும் பின்னுமாய் பெரிய அளவில் சிரித்துக்கொண்டு
சிலிர்த்துக்கொண்டு சிலுப்பிக்கொண்டு போஸ் கொடுக்கும்
ஸ்டிக்கராய் இருக்கிறார்கள்
ராபர்ட் கிளைவ் லண்டன் கோர்ட்டில்
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மக்களைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்து போனது....
எண்ணும்போது
சுவாரஸ்யமாய் இருந்தது
எண்ணி முடித்த பிறகு ஏண்டா எண்ணினோம்
என எண்ண வைக்கிறது!
வேலை இல்லாத பொழுதுகளில்
நான் மட்டும்தான்
இப்படியா இல்லை
நண்பர்களில் சிலருக்காவது இந்த மாதிரி எண்ணும் எண்ணம்
வருமா?
ஒரே கன்ப்யூஷன்!

No comments:
Post a Comment