Tuesday, September 14, 2021

நவோதயா பள்ளி பற்றி தெரிந்த தெரியாத தகவல்கள்....!!!

 தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அறிவீர்கள். நவோதயா என்றால் என்ன? அதை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலாக அமையும் என நம்புகிறோம்.

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நடுத்தர மற்றும் ஏழை கிராமப்புற மாணவர்களும் தரமான ஓர்மை கல்வி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், தேசிய கல்வி கொள்கை 1986-ன் படி சமூக நீதியை அனைத்து தட்டு மக்களுக்கும் ஒரு சேர கொண்டு சேர்க்கும் பொருட்டு முதன் முதலில் 1985-86ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டது தான் ‘நவோதயா வித்யாலயா’ (NV-Navodya Vidyalaya) ஆகும்.
நவோதயா பள்ளிகளை நிர்வகிப்பது யார்?
மத்திய அரசின் அங்கமான மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development) நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘நவோதயா வித்யாலயா சமிதி’ என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு தான் நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் நிர்வகிக்கிறது.
இதற்கான பாட திட்டங்களை வடிவமைப்பது, தர நிர்ணயிப்பது, அங்கீகாரம் வழங்குவது முதலானவற்றை மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்கிற சிபிஎஸ்இ (CBSE- Central Board of Secondary Education) கையாள்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...