GST கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது ! அதில் சில பொருட்களுக்கு GSTகூடுதலாகவும் சிலவற்றுக்கு குறைவாகவும் GST மாற்றி அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது !
அப்படியே நிதி அமைச்சர் பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல் டீசல் போன்றவைகளை GST யில் கொண்டுவர மத்திய அரசு முனைவதாகவும் அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்று கேட்டு கொண்டார் ! உடனே எழுந்தது கூக்குரல் முக்கியமாக கேரளா மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ( அதில் கலந்து கொள்ளாமல் இங்கிருந்தே ) போன்ற மாநிலங்களில் இடம் இருந்து !
அவர்கள் கருத்து மாநில அரசுகள் குறைந்து மத்திய அரசு வருவாய் கூடிவிடுமாம் ! GST மூலம் வரி வருமானத்தை இருவரும் முறையே மத்திய மாநில அரசுகள் சமமாகத்தான் பிரித்து கொள்ளும் போது எப்படி ஒரு தரப்புக்கு மட்டும் இழப்பு வரும் ?
GST நடைமுறைக்கு வந்தால் பெட்ரோல் டீசல் ரூ 40 வரை குறையும் ! இதனால் மக்களுக்கு தானே பயன் ! இதில் மக்கள் நலனை வாய் கிழிய பேசி ஏதோ மத்திய அரசு மட்டுமே இந்த பொருட்கள் ரூ 100 க்கு மேல் விற்பதற்கு காரணம் என்று கூப்பாடு போடும் மோடி எதிர்ப்பாளர்கள் இதற்கு ஏன் உடனே சம்மதிக்கவில்லை ? யார் முக்கிய காரணம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது ! அவர்களுக்கு மக்கள் நலன் ஏதும் இல்லை ! அவர்கள் செய்வது அரசியல் மட்டுமே என்பது வெட்ட வெளிச்சம் ! இதனால் ஏற்படும் வரி இழப்பை வேறு வகையில் ஈடுகட்டி கொள்ள முடியாதா என்ன ? கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் மச்சு நெல்லும் குறையக்கூடாது மக்கள் வயிறும் வாடக்கூடாது என்று ! இது இவர்களுக்கு முக்கியமாக பி ஜே பி அல்லாத மாநில அரசுகளுக்கு அப்படியே பொருந்தும் !
No comments:
Post a Comment