Friday, September 10, 2021

இதுதான் நேர்மறை சிந்தனை.

 பலசரக்கு கடையில் போய் "மிளகு வேண்டும் " என்று கேட்கிறோம். கடைக்காரரிடம் மிளகு இல்லை. ஆனால் அவர் வற்றல் இல்லை என்று சொல்லி நம்மை திருப்பி அனுப்ப நினைக்க மாட்டார். ஏதாவது ஒரு பொருளை வாங்க வைத்துவிட வேண்டும் என்று நினைப்பார். அதனால், "மல்லி இருக்கிறது. சீரகம் இருக்கிறது. கடுகு இருக்கிறது" என்று வரிசையாக இருக்கும் பொருட்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்.

அது அவரது வியாபார தந்திரம். எது கேட்டோமோ அது அவரிடம் இல்லை. 'இல்லை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'இருக்கிறது' என்று நேர்மறையாகப் பேசி வியாபாரம் செய்யும் உத்தி வியாபாரிகளுக்கு உண்டு.
கணக்கா....கணக்குக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. ஆங்கிலமா..அதைப்பற்றி என்னிடம் பேசவே பேசாதீங்க. எனக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்ப தூரம். வரலாறா... ரொம்ப ரொம்ப போரு. அதைப்போய் எவன் படிப்பான்?
இப்படிப்பட்ட எதிர்மறையாகப் பேசுவதைத்தூக்கி வீசிவிட்டு நேர்மறை சிந்தனைக்கு மாறுங்கள்.
ஆவதும். ஆகாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது. குப்புற விழ... எழுந்து நிற்க... நிமிர்ந்து நடக்க.... என்று அத்தனை கலைகளும் நம் கையில் உள்ளது.
பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மறையாக இருக்கட்டும். கன்னியாகுமரியில் நின்று கொண்டு இந்தியா இங்குதான் முடிவடைகிறது என்று கூறினால் அது எதிர்மறை சிந்தனை.
கடல் பக்கம் பார்த்துக் கொண்டு நின்றால் இந்தியா அங்குதான் முடிவடையும்.
மாறாக நிலத்தைப் பார்த்து திரும்பி நின்று கொண்டு சொல்லிப் பாருங்கள்.
இந்தியா கன்னியாக்குமரியில் இருந்துதான் தொடங்குகிறது என்றுதான் சொல்லமுடியும். இதுதான் நேர்மறை சிந்தனை.
முடிவில் இருந்து அல்ல. தொடக்கத்திலிருந்து நமது சிந்தனை உதயமாகட்டும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...