முக்கால் ரூபா கூலிக்கு
முதுகு ஒடிய களை வெட்டிய
ஆயா அத்தைகள் மறைந்தனர்.
மரத்தடி நிழலில் சாய்ந்து
புல் பிடுங்கி நேரம் கழிக்கும்
நூறு நாள் திட்ட பேரன் பேத்திகள் ..
பௌர்ணமி ஒளியில் அணி சேர்த்து
பாத்தி பிடித்து அண்டை கழித்த
பாட்டாளி தமிழர்கள் இன்றில்லை.
காலை பத்தரை மணிக்கு
டாஸ்மாக்கில் காத்திருக்கின்றனர் ..
தொலைக்காட்சி முன் வாழ்கின்றனர்.
உழைப்பு பறிக்கப்பட்டு
இலவசங்களால் நிரம்பும் வயிறு
உரிமையிழப்பை உணர்வதில்லை.
திட்டமிட்டு திராவிடம் நடத்தும்
இன அழிப்பில் அடிமைகள் உருவாக்கம்.
தலைமுறை விழித்தால் விடியல் பிறக்கும்.

No comments:
Post a Comment