Thursday, September 9, 2021

பாவம் இந்தா பொம்பளா.

 ஒரு வீட்லா வேலைகாரியா சேர்ந்து மாசம் கொடுக்குறா காச வச்சி இவ்வளவு வாங்க முடிஞ்சிருக்கு.

கோடநாடு எஸ்டேட்:
942 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தேயிலைத் தோட்டத்தின் மதிப்பு ரூ.1,115 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதில் சிறிய அளவிலான பங்கு மட்டுமே ஜெயலலிதாவின் பெயரில் உள்ளது.
கட்டிடங்கள்:
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தின் மொத்த பரப்பளவு 24,000 சதுர அடி. அதன் மொத்த மதிப்பு ரூ.90 கோடி
ஐதராபாத் அருகே செகந்திராபாத்தில் உள்ள 7,009 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆடம்பர வீட்டின் மதிப்பு 15 கோடி
3,600 சதுர அடி கொண்ட போயஸ் கார்டனில் உள்ள வணிக கட்டிடத்தின் மதிப்பு ரூ.7.8 கோடி
சென்னையில் உள்ள 790 சதுர அடி கொண்ட பிளாட்டின் மதிப்பு ரூ.1.7 கோடி
சென்னையில் உள்ள 1,206 சதர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு ரூ.1.4 கோடி

போயஸ் இல்லத்தில் இருந்த பொருட்களின் மதிப்பு:
அங்கு இருந்த வாகனங்களின் மதிப்பு ரூ.42 லட்சம் என்று வீக் தெரிவித்து உள்ளது.
ரூ.5.8 கோடி மதிப்புள்ள 21.3 கிலோ தங்கம், ரூ.5.2 கோடி மதிப்புள்ள 1,250 கிலோ எடையுள்ள ஆபரணங்கள்.
2,140 சேலைகள், 750 காலணிகள், 91 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 500 கிரிஸ்டல் பாத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஜெ, சசிக்கு தொடர்புடைய 6 நிறுவனங்கள்:
1,190 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட ரிவர்வே ஆக்ரோ பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி.
சிக்னோரா பிசினஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.126 கோடி
200 ஏக்கர் கொண்ட மீடோ ஆக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி
லெக்ஸ் பிராபர்டி டெவலப்மண்ட் நிறுவன சொத்து மதிப்பு ரூ.99.7 கோடி
இந்தியா தோஹா கெமிக்கல்ஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.86.9 கோடி
50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் நிறுவன சொத்து மதிப்பு 40 கோடி
விவசாய நிலங்கள்:
ஐதராபாத் அருகே உள்ள ஜீடிமெட்லா கிராமத்தில் அமைந்து உள்ள 14.50 ஏக்கர் விளைநிலத்தின் மதிப்பு ரூ.14.50 கோடி
செய்யூரில் உள்ள 3.43 ஏக்கர் விளை நிலத்தின் மதிப்பு ரூ.34 லட்சம்
முதலீடுகள்:
சென்னையில் உள்ள பல வங்கி கணக்குகளில் ரூ.10.64 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது
நமது எம்.ஜி.ஆர். நாளிதழை நடத்தி வரும் ஸ்ரீ ஜெயா பதிப்பகத்தில் ரூ.21 கோடி முதலீடு
நமது எம்.ஜி.ஆர். நாளிதழை அச்சிட்டு வந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு
கோடநாடு எஸ்டேட்டில் ரூ.3.13 கோடி முதலீடு
ராயல் வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.40 லட்சம் முதலீடு
கிரீன் டீ எஸ்டேட்டில் 2.20 கோடி முதலீடு
சசிகலா குடும்பத்தின் சொத்துக்கள்:
இளவரசியின் மகன் விவேக் பெயரில் உள்ள 11 திரைகளை கொண்ட சென்னையின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஜாஸ் சினிமாவின் மதிப்பு மட்டும் ரூ.1,000 கோடி என தி வீக் குறிப்பிட்டு உள்ளது
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான மிடாசின் சொத்து மட்டும் ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை அருகே ஓ.எம்.ஆர். சாலையில் சிறுதாவூரில் அமைந்துள்ள 115 ஏக்கர் நிலம் மற்றும் பங்களாவின் மதிப்பு ரூ.100 கோடி
ஜெயா டிவியை நடத்தி வரும் மேவிஸ் சாட் காம் நிறுவனத்தில் ஜெயலிதா நேரடியாக தலையிடாமல் சசிகலாவை வைத்து இயக்கியதாகவும் தி வீக் குறிப்பிட்டு உள்ளது.
May be an image of 2 people, people standing, outdoors and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...