கோவில்களுக்கு செல்லும்போது மறக்காமல் சோம்பல் இல்லாமல் அந்த கோவிலின் தெப்ப குளத்தில் குளித்து விட்டு செல்ல வேண்டும். அது சாத்தியம் இல்லை என்றால், கால் கழுவி செல்ல வேண்டும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் கதிர்களை உள்வாங்கி வைத்து கொள்கிற தன்மை தண்ணீருக்கு உண்டு. அதே போல் அவற்றை கடத்துகிற தன்மையும் தண்ணீருக்கு உண்டு.
அது அன்றியும், நம் கை பேசிக்கும் டவருக்கும் உள்ளது போன்ற ஒரு தொடர்பு நீருக்கும் இறை உலகுக்கும் உண்டு. நாம் செய்யும் பாவ புண்ணியங்களை எம உலக கணக்கரான சித்திரகுப்தனுக்கு எடுத்து செல்லும் ஒரு மீடியம் ஆக நீர் இருக்கிறது. நான் கோவிலுக்கு வந்து இருக்கிறேன் என்று தெரியப் படுத்துவது (attendance) இந்த தெப்பக்குள தொடர்பு ஆகும்.
மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள் கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதி, பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு உடையதால் சில் என்ற இந்த சக்தி நிறைந்த நீர் நரம்புகளை தூண்டி எலும்புகளை வலுபெற செய்கிறது
நுழைவாயிலில் இருக்கிற படிகளில் கால்பாதம் அழுந்த மிதித்து ஏற வேண்டும். இது இக்காலத்திற்கு சொன்னால் சிறந்த அக்குபஞ்சர் அழுத்தம். நம்முடைய கால்ப்லாடார், பெரிகாடியம்,மூளையில் உள்ள பதிவு இடங்களை சமன் படுத்தும்.
கோவிலுக்குள் சென்றதும் முதலில் கொடி மரம் முன் நின்று பக்தி செலுத்த வேண்டும். அதன் பின் பலிபீடம் முன் நின்று, இறைவா, நான் அறிந்தும் அறியாமலும் செய்த பிழை அனைத்தும் பொறுத்து அருள்வாய், இனியும் பிழை செய்யாது காத்து அருள்வாய் என்று வேண்டுதல் செய்ய வேண்டும். பின் முதல் வணக்கம் கணபதிக்கு செலுத்த வேண்டும். பிரகாரம் சுற்றி வருகையில் அங்குள்ள தெய்வங்களை வணங்க வேண்டும்.
கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடக்க நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சீராகும்போது மூளையின் பரபரப்பு தன்மையும் அடங்கி மூளையில் சுரக்கும் சுரபிகளின் செய்யலபாடும் சமன் படும். இதனால் உடலில் பரபரப்பு தன்மை (palpitation) அடங்கி அமைதி ஏற்படும் .
கோவிலின் உள்ளே செல்லும்போது உடம்பும் மனதும் ஒருமித்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அபபொழுது அக் கோவிலில் யந்திர சக்திகள் உள் நிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு போற்றி வருகிற சக்தி நம்முள் பாய்வதை உணர முடியும்.
கோவிலுக்குள் நம்முடைய எண்ணங்களும் வேண்டுதல்களும, ் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களினுடைய சக்தி நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை சிறிது குறைத்தும், நீக்கியும் இருக்க வைக்கும் ஆற்றல் பொருந்தியது.
ஆலயங்களில் பஞ்ச பூத வழிபாட்டு முறையே இறை வழிபாட்டு முறையாகவும் உள்ளது. சந்தனம் நிலத்தையும், மலர் ஆகாயத்தையும், தீபம் அக்னியையும், தூபம் வாயுவையும், பலதரப்பட்ட அபிஷேகங்கள் நீரையும் குறிக்கும்.
அபிஷேக ஆராதனைகளின் மத்தியில் ஒலிக்கப்படும் மந்திரங்கள், எந்திர சக்தியுடன் சேர்த்து ஒருவிதமான இறை சக்தியை உருவாக்குகிறது. அந்த சக்தியானது கற்ப கிரக வாயில் மூலம் வெளியேறி, அங்கு பக்தி செலுத்தும் அனைவர் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கோவிலில் இருந்து வெளியில் வரும்போது மன இறுக்கம் குறைந்து மனம் இலேசாகி இருப்பதை உணர முடிகிறது.

No comments:
Post a Comment