Sunday, September 5, 2021

*_வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!!_*

 காலைப் பொழுதே பலருக்கும் காபியில் தான் விடியும். ஆனால் ஒரு சில உணவுகளை காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதன் அமிலங்களின் தன்மை அதிக அளவில் இருப்பதால் அது இரைப்பையில் சுரக்கின்ற அமிலத்துடன் கலந்து பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. எனவே வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்.

பழச்சாறு
👉 காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கக்கூடாது. ஏனென்றால் அதிலுள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எனவே காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பிறகு பழச்சாறு குடிக்கலாம்.
காபி மற்றும் டீ
👉 காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தக்காளி
👉 தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஆசிட் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கின்ற ஆசிட்டுடன் இணைந்து, கரைக்க முடியாத கற்களை வயிற்றில் உருவாக்குகிறது.
வாழைப்பழம்
👉 வாழைப்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மெக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
மாத்திரைகள்
👉 மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, மாத்திரையானது, நமது வயிற்றில் உள்ள படலத்தை அரித்து, வயிற்றில் சுரக்கின்ற அமிலத்துடன் கலந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சோடா
👉 சோடாவில் அதிக அளவில் கார்போனேட்டட் ஆசிட் இருப்பதால், இதை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
தயிர்
👉 தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது அல்ல. இதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். எனவே இவ்வகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து, நலமுடன் வாழுங்கள்.
இனிய காலை வணக்கம்,
வாழ்த்துக்கள்
, வாழ்க வளமுடன் 🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...