Monday, September 6, 2021

ஒருவருக்கு உதவி செய்யும் போது, பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யாதீர்கள்.

 *ஏணி*,*தோணி*,

*எலுமிச்சை**நார்த்தங்காய்*,
*வாத்தியார்**நமக்கு உணர்த்தும் பாடம்*!
மேற்கண்ட வார்த்தைகளை நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய ஆசிரியர் கூற கேட்டுள்ளேன்.
அதற்குரிய சரியான அர்த்தம் அப்போது தெரியாவிட்டாலும்,
இந்த வார்த்தைகள் மிகப்பெரிய தத்துவத்தை சொல்லக்கூடியவைகள் என்பதை தற்போதுதான்
புரிந்து கொண்டேன்
1)*ஏணி*.
ஏணி எத்தனையோ பேர்களை உயரத்தில் ஏற்றிவிடுகிறது.
ஏணி மேலே ஏறிச்செல்ல உதவும்;ஆனால் அது இருக்கும் இடத்திலேயே இருக்கும்.
ஏணி மூலமாக உயரத்திற்குவந்தவர்கள் நன்றியுணர்ச்சியுடன் ஏணியை நினைக்காவிட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை உயரத்த எப்போதும் தயாராக ஏணி இருக்கிறது.
பல நேரங்களில் நாமும் ஏணியாக இருப்பதில் தவறில்லை.
இது*ஏணி* நமக்கு உணர்த்தும் பாடமாகும்
2)*தோணி*.
தோணி தண்ணீரில் தத்தளிப்பவர்களை கரையேற்றியவுடன் மற்றவர்களை கரையேற்ற சென்றுவிடுகிறது.
தோணி நீர்ப்பரப்பை கடந்து, அக்கரை சென்று முன்னேற உதவுகிறது.ஆனால் அது கரையிலேயே இருக்கும்.
நாமும் வாழ்வில் தத்தளிப்பவர்களை
(தடுமாறுகிறவர்களை) பத்திரமாக அவர்களை கரையேற்றவேண்டும்
(வழிகாட்டி உதவிட வேண்டும்).
அவ்வாறு உதவி செய்து கரையேற்றியவுடன் அதையே நினைத்துகொண்டு
இருக்காமல் அதேபோல் சிரமப்படுகிற மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
இது*தோணி* நமக்கு உணர்த்தும் பாடமாகும்
3)*எலுமிச்சை*
மற்ற கனிகள் ஒவ்வொரு பருவத்திலும் ஓவ்வொரு சுவையில் இருக்கக்கூடியது
ஆனால் எலுமிச்சை மட்டும் எல்லா பருவத்தில் ஒரே புளிப்பு சுவை மட்டும்தான் .
அதேபோல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய குணாசதியங்கள் மாறக்கூடாது என்பது *எலுமிச்சை*நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
4)*நார்த்தங்காய்*மற்ற உணவுப்பொருட்களை எளிதில் ஜீரணிக்க உதவும்.
ஆனால் அது சுலபத்தில் ஜீரணிப்பதில்லை (ஏப்பம் விட்டால் நார்த்தங்காய் நெடி!!).
5)*ஆசிரியர்*(ஆச்சார்யர்)
கல்வி சொல்லிகொடுக்கும் ஆசிரியராகட்டும் அல்லது கலைகள் சொல்லிகொடுக்கும் ஆச்சார்யராகட்டும்
தன்னிடம் பயில வருபவர்களுக்கு தெரிந்தவற்றை சொல்லிகொடுத்து அதன் நன்றியுணர்வை அவர்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அதைபற்றி கவலைபடாமல் தன்னை தொடர்ந்து தேடிவருபவர்களுக்கு மனப்பூர்வமாக பிரதிபலன் பாராமல் சொல்லிக்
கொடுக்கிறார்கள்.
ஆசிரியர்(ஆச்சார்யர்) மாணவர்களை ஊக்குவித்து வாழ்க்கையில் வெற்றி பெற உதவினாலும், அவர் வாழ்க்கையில்
பெரிய மாறுதல் ஏதும் இருப்பதில்லை.
அதேபோல் நாமும் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழவேண்டும்
என்பதை*ஆசிரியர்*
(ஆச்சார்யர்)உணர்த்துகிறார்.
(வேதக்கூற்று:*ஆசார்ய தேவோ பவ*: *ஆசிரியரைத் தெய்வமாகக் கொள்ளவும்*)
ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை.
பிரதிபலன் எதிர்பார்க்காமல், மற்றவருக்கு உதவி செய்து பாருங்கள்.
நீங்கள் எதிர்பாராத சமயத்தில் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இது உங்கள் உதவியின் சக்தி….! நம்புங்கள்….!
ஒருவருக்கு உதவி செய்யும் போது, பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யாதீர்கள்
.
ஆனால்,அதன் பலாபலன், உங்களைத் தானாக வந்தடையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...