செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பையனூர் பகுதியில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக அந்த பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இந்த பங்களவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் அந்த பங்களா முடக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1600 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளும், கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உள்ளிட்ட 65 சொத்துகள் கடந்த 2020ம் ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment