இன்றைக்கு எல்லோருக்கும் உள்ள ஓர் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா...???
சாய்ந்து கொள்ள ஒரு தோள்!!!...
ஆம்...
தன்னைத் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருந்தால் நல்லது என்றே பலரும் ஆசைப்படுகிறார்கள்,
இது ஒரு வகை மன நோய் மன ஊனம்.
உண்மையில் உடல் ஊனமுற்ற பலர் கூட இந்த எதிர்பார்ப்பிலிருந்து விலகி சுயமாக இயங்கவே விரும்புகிறார்கள்,
ஆனால், கையும் காலும் வலுவாக இருந்தாலும், மனது பலவீனம் அடைந்த சிலர் யாரையாவது சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்,
●இந்தப் பலவீனத்தைத்தான் சிறு சிறு ஜோதிடர்கள்,
●சின்னச் சின்ன குட்டிச் சாமியார்கள் முதல், டைனோசர் சாமியார்கள் வரை வசமாகப்பயன் படுத்திக் கொள்கிறார்கள்,
□தனது மூளையை அடகு வைத்து விட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை பிறர் வசம் விட்டவர்கள்,
வாழ்வில் மிகப் பெரிய நிலையை ஒரு போதும் எய்தவே முடியாது,
புத்தர்,
உலகையே உலுக்கிய மனிதருள்
மாமனிதர், அவர் யாரைக் கேட்டுத்துறவு பூண்டார்???
சகல உயிர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் கருணாமூர்த்தி அவர்,
ஆனால்,
அவர் ஆறுதலுக்காக சாய்ந்து கொள்ள ஒரு தோள் இறுதி வரை கேட்கவில்லை,
கோயிலில் உள்ள சாமிகளுக்குப்பேரும், புகழும் எதனால் தெரியுமா.???
பெருவாரியான மனிதர்களின் புலம்பலை, மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்வதால் தான்.
எதிர்த்துப் பேசாமல், எவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பது தான்,
□கடவுள் தன்மையின் தனித்துவம்□
அதனால்தான், அவருக்கு இவ்வளவு பிரபலம்,
அதாவது,
பலரது எதிர்பார்ப்பான சாய்ந்து கொள்ள ஒரு தோள் என்கிற ஆசையே கோயில்களின் எண்ணிக்கையை அதிகமாக கூட்டி விட்டது.
எப்போதுமே
சிலர் தங்களின் உறவுக்காரர்
களில், சிலர் ஒருவரின் பெயர் சொல்லி,
அவர் என்னைக் கைதூக்கி விட்டிருக்கலாம்... ஆனால், மனுஷர்.....
செய்ய மாட்டார் என்றே திட்டுவார்கள்.
என் நண்பர் ஒருவர் உண்டு.
எப்போதும் யாராவது இன்னொரு நண்பர் பெயர் சொல்லி,
அவனுக்கு இப்ப போனஸ் வந்துருக்கு
எனக்கு ஐயாயிரம் தான் தேவை... கொடுக்கலாம் மனசே வராது என்பார்.
எப்போதுமே யாருக்கு என்ன கிடைத்தது, என்றே கணக்கு வைத்திருப்பார்,
தான் சம்பாதித்து யாருக்காவது ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணமே அவருக்கு வந்ததே இல்லை, ஆனால், பிறரிடமிருந்து எதிர் பார்த்துக்கொண்டே எப்போதுமே இருப்பார்.
இத்தகைய மன ஊனங்கள் முக்கியமாக வேண்டியவை...
இதற்கு நேர்மாறாக இருந்தவர்களும் உண்டு....
மகாகவி பாரதி கடையத்தில் வாழ்ந்த போது, அவர் தங்கியிருந்த வீட்டுக்
குடையவர் ஐந்தாறு வேட்டி துண்டு அணியக்கொடுத்தார். இடுப்பு வேட்டி பஞ்சகச்சம் கட்டக்கூடியது,
பத்து முழம், மேல் துண்டு அங்கவஸ்திரம் ஆறு முழம்,
புது வேட்டி, துண்டோடு தெருவில் இறங்கிய பாரதி,
அங்கே, தெருவில் குளிரில் நடுங்கிய ஏழையைப்பார்த்ததும், இடுப்பு வேட்டியை கழற்றி ஏழைக்குக்கொடுத்து விட்டு,
மேல் துண்டை இடுப்புக்கு அணிந்து கொண்டு வீடு திரும்பினார்
கொடுக்கும் போதே மேல்துண்டை கொடுத்தால் போதாதா என்று யாரோ கேட்டதற்கு,
அதெப்படி... அவன் வெளியே இருக்கிறான், குளிராதோ....???
வீட்டுக்கு உள்ளே இருக்கிற
எனக்கு இது போதாதா..??? என்றார் வள்ளல் மகாகவி பாரதி,
அவரா ஏழை..??? கவியரசர் அல்லவா.!!!
பிறர் தோளில் சாயும் படி வாழ்க்கை
அவரை பல இடங்களில் பல வழிகளில் நிர்பந்தித்தது, ஆனால், பலரையும் தன் தோளில் சாய்ந்து கொள்ளச்சொல்லும் வாழ்க்கை வாழ அவர் மனம் பெற்றிருந்தது.
வாழ்வில் புகழ் பெற்ற, மிக உயர்ந்த பெருமக்கள், ஆன்றோர்களின் வரலாறுகளை ஊன்றிக் கவனியுங்கள்,
வெற்றியாளர்களின் விசேஷ குணம் இதுவே,
தோள் கொடுத்து தாங்கத்தயார்;
சாயத்தோள் வேண்டியதில்லை என்பதே அவர்கள் அறிவிப்பு,
ஏசுபிரான் அப்படித்தானே உலகோரைத் தம் நிழலில் இளைப்பாற அழைப்பு விடுத்தார்,
எப்போதும் ஏதாவது ஒரு துக்கத்தை,
துயரத்தை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு யாராவது அகப்பட மாட்டார்களா.. அவர்கள் மேல் அதை இறக்கி வைக்கலாம் என்கிற சுய
பச்சாதாப நிலையில் இருந்து முதலில் நீங்கள் வெளியேறுங்கள்
ஊன்றுகோலுக்கு **ஏங்காதீர்கள்**
உங்களுக்கு ஊனம் இல்லை என்றே முதலில் உணருங்கள்*
பிறரால், நான் கைதூக்கி விடப்பட வேண்டியவன், என்ற எண்ணமே ஒரு கெட்ட வார்த்தை....
பலரை உயர்த்தும் பலம் நமக்குள் இருக்கிறது என்று தயவு செய்து நீங்கள் உணருங்கள், நம்புங்கள்,
நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நகரும் பெரியவர் ஒருவர், உடல் ஊனமுற்றவர்களின் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாட்டில் ஒரு சங்கம் நடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா......???
திருமணமே செய்து கொள்ளாத *வித்யாகர்* ஆதரவற்ற அனைவரையும் ஆதரிக்கும் குடும்பஸ்தனாக *உதவும் கரங்கள்* நடத்துகிறார் தெரியுமல்லவா...
ஒரு குழந்தை கூடப் பெறாத *தெரஸா* எல்லோருக்குமே *மதர் தெரஸா* என்பது ஞாபகம் இருக்கிறதா.......???
சாய்வதற்குத்தோள் தேடுகிறவர்கள் சாய்ந்தே போகிறார்கள்......!!
உயிருடன் இருக்கும் போதே இறந்து விடுகிறார்கள்,
கம்பீரமாக இமயமலை போல் இருப்பவர்கள், காலம் கடந்தும் வாழுகிறார்கள்...!!!
○ஆகவே, இமயமலை போல இதய உறுதி கொள்ளுங்கள்○
●சாய்வதற்கு ஒரு தோளை தேடாதீர்கள்●

No comments:
Post a Comment