Thursday, September 16, 2021

சட்ட போராட்டத்தால் நீட் தேர்வை விரட்டுவோம். : தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

  'மருத்துவ படிப்புக்காக தற்கொலை செய்து உயிர் விடும் அவலத்தை தடுத்திடுவோம்; சட்டப் போராட்டத்தின் வழியே, 'நீட்' தேர்வை விரட்டுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:நீட் என்ற உயிர்க் கொல்லிக்கு, அரியலுார் மாணவி கனிமொழி பலியாகி இருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவர்களின் உயிர்ப்பலிக்கு, இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை துவக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழு வீச்சில் துவக்கி உள்ளோம்.
பா.ஜ., தவிர்த்து, அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை, இந்த சட்டப் போராட்டத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்ற உறுதியை வழங்குகிறேன்.நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
கல்வியில் சமத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவர்கள் மனம் தளராதிருக்கும் பயிற்சியை அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
உயிர்காக்கும் மருத்துவ படிப்புக்காக தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தை தடுத்திடுவோம்; சட்டப் போராட்டத்தின் வழியே நீட் தேர்வை விரட்டுவோம். மாணவி கனிமொழி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு, இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person and text that says 'முதலஹாச்ச நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்த நிச்சயம் பாடுபடுவோம்; மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 'மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள்' 'கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்' 'கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், நீட் எனும் அந்தியை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்' -முதல்வர் ஸ்டாலின் dinamalardaily'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...