Monday, September 13, 2021

*பூஜை செய்யும் போது கற்பூரம் ஏற்றுவது ஏன்?*

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோவில் திருவிழாக்களின்போது மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்போது, அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், பெரும்பாலான மக்கள் கூடுவதால் சிலர் எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பர். இந்நிலையில், கோவிலில் பூஜை செய்யும்போது கற்பூரம் கொளுத்துவதால் ஏற்படும் புகை சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய நேர்மறை சக்தியை உருவாக்குவதுடன் ஆக்ஸிஜனையும் வெளிவிடுகின்றது.
கற்பூரம் கடைசி வரை எரிந்து எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான் என்பதை கற்பூரம் நமக்கு உணர்த்துகிறது.
எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.
மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.
கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும், நம்மால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யவும் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
கற்பூரத்தை எரிப்பதால் கிடைக்கும் சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைப்பது மட்டுமல்லாமல் இறையருளையும் பெற முடிகிறது.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...